பாலியல் புகார்.. மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி .. அதிரடி தீர்ப்பு
விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். பலமுறை வாதாட கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்த நிலையில், நீதிமன்ற எச்சரிக்கைக்கு பின்னர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் 5 நாட்கள் வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கடந்த 9 ஆம் தேதி இறுதி வாதத்தை முன் வைத்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 9 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
இந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கினார். ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தார்.
செங்கல்பட்டு மாஜி எஸ்பி கண்ணனுக்கு விதிக்கப்பட்ட ரூ.500 அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி: தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டிஜிபி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக ராஜேஸ்தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அரசு தரப்பின் வாதம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்தது.
இதனையடுத்து பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் ராஜேஸ்தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். ராஜேஸ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அப்பீல் செய்தார் ராஜேஸ் தாஸ், அப்பீல் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், ராஜேஷ்தாஸுக்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவையும் அதிரடியாக தள்ளுபடி செய்தார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications