கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையிலிருந்து உபரி நீர் திறப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணிமுக்தா அணையிலிருந்து 1,308 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் மூலம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ஏரி, குளங்கள் என அனைத்தும் விறுவிறுவென நிரம்பி வருகின்றன. இதையடுத்து அதனை தீவிரமாக கண்காணித்து வரும் மாவட்ட நிர்வாகத்தினர், நிலைமைக்கு ஏற்றவாறு நீரை திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அணைக்கரைக்கோட்டாலம் அருகே அமைந்துள்ள மணிமுக்தா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 36 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ளது.
இதனால் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து அணைக்கு வரும் 1,308 கன அடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என்றும், அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் அணையிலிருந்து உடனடியாக உபரிநீர் திறந்து விடவும், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவுறுத்தியிருந்தார்.
மணிமுக்தா அணை நீண்ட நாட்களுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் அதனை நீராதாரமாக நம்பியுள்ள பாசன விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனிடையே விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகள் திறந்துவிடப்படுகிறது.
மணிமுக்தா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்மட்டம் உயர்வதோடு பாசன வாய்க்கால் மூலம் சுமார் 6,000 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறக் கூடும் என்பது கவனிக்கத்தக்கது. கல்வராயன்மலை பகுதியில் பெய்யும் மழையானது மணி மற்றும் முக்தா என இரண்டு ஆறுகள் வழியாக இந்த அணைக்கு தண்ணீராக வந்து சேருகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications