Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பில்லி சூனியம் நீக்க உடலுறவு பரிகாரம்... சீரழிந்த 50 பெண்கள் - போலி சாமியார் கைது

போலி சாமியாரினால் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். ஊடகங்களின் மூலம் எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை கண்டு கொள்ளாமல் போய் மீண்டும் போலிகளிடம் சிக்கி சீரழிகின்றனர். பணத்தோட

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருப்பார்கள். ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பணத்தை இழந்தால் கூட சம்பாதித்து விடலாம், மூட நம்பிக்கையால் மானத்தையும் இழந்து நிற்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி போலி சாமியார்களும் ருசிகண்ட பூனைகளாய் அலைகிறார்கள். செய்வினை, பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியரை திண்டிவனம் போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டில் சின்னச் சின்ன பிரச்சினை என்றாலே யாராவது செய்வினை வைத்திருப்பார்களோ என்ற பயத்தில் போலி சாமியார்களைத் தேடி போவதால் அதை சாதகமாக்கிக் கொண்டு வீட்டு பெண்களை ருசி பார்க்கின்றனர். திண்டிவனத்தை அடுத்த ஓங்கலூர் செல்வமணியும் அந்த போலியார் சாமியார் வகையறாவைச் சேர்ந்தவன்தான்.

காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டவன் பெருமாள் மணி என்கிற செல்வமணி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் இரவு நேரங்களில் வீட்டில் மந்ரீகம், பில்லி, சூனியம் வைப்பது என்று பூஜைகள் செய்யவே, பயந்து போன மனைவி குழந்தைகளுடன் அவருடைய அம்மா வீட்டிற்கு சென்று விடவே, தனிமரமாக நின்ற செல்வமணி குறிவைத்தது அப்பாவி பெண்களைத்தான்.

மந்ரீகம் செய்வினை

மந்ரீகம் செய்வினை

திண்டிவனம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தனக்கு பில்லி, சூனியம், மந்ரீகம், செய்வினை எடுக்க தெரியும், பரிகாரம் செய்யப்படும் என்ற தகவலை பரப்பினான் செல்வமணி. பாதிரியாரநல்லூர், காட்ராம்பாக்கம் பகுதிகளில் அதிக அளவில் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஏமாற்றி பணம் பறிக்கத் தொடங்கினான்.

பெண்களை குறி வைத்த மணி

பெண்களை குறி வைத்த மணி

செல்வமணியின் ஆசை பணம் சம்பாதிப்பதுடன் நிற்கவில்லை. தன்னை நாடி வரும் பெண்களின் உடல்களை ருசிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. பல பெண்களை மயக்கி தனது ஆசைக்கு பயன்படுத்திக்கொண்டான். சில பெண்களுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தினான். 50க்கும் மேற்பட்ட பெண்களை சுவைத்துள்ளான் மணி. பரிகாரத்திற்காக வந்த ஹேமா என்ற பெண்ணை தன்னுடனேயே உதவியாளராக வைத்துக்கொண்டான்.

செய்வினை வச்சிட்டாங்க

செய்வினை வச்சிட்டாங்க


காஞ்சிபுரம் மாவட்டம் வடமலைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு மே மாதம் செல்வமணியிடம் வந்தார். அவன் ஒரு போலி சாமியார் என்று தெரியாமலேயே தனது வீட்டில் பிரச்சினை இருப்பதாகவும், யாரோ செய்வினை வைத்ததில் தனது மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும் அவனை மறக்கடிக்க தனது மகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். ஆடு தானா வந்து சிக்குதே என்று சந்தோசப்பட்ட செல்வமணி, வடமலைப்பாக்கத்திற்கு சென்றார்.

ஊருக்கு கூட்டி வந்தான்

ஊருக்கு கூட்டி வந்தான்

உதவியாளர் ஹேமா உடன் கிராமத்திற்கு சென்ற செல்வமணி அங்கிருந்த இளம் பெண்ணை பார்த்த உடன் ஆசைப்பட்டான். இங்கே வச்சு எதுவும் செய்ய முடியாது, பிரச்சினை தீர வேண்டும் என்றால் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்று தனியாக அழைத்துச்சென்றான். ஓங்கூருக்கு போன உடன் தனது சுய ரூபத்தை காட்டத் தொடங்கினான். தன்னுடன் உறவு கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உறவு கொண்டான் அந்த கயவன்.

 வச்சு செய்த சாமியார்

வச்சு செய்த சாமியார்

ஒருநாள் இரண்டு நாள் இல்லை, ஒருவருடம் அந்த பெண்ணை சீரழித்தான். கேட்கும் போதெல்லாம் இன்னும் பிரச்சினை தீரவில்லை என்றே சொல்லி வந்திருக்கிறான். பெற்றோர்களும் சரி என்று விட்டு வைத்தனர். சரியாக ஒரு வருடம் கழித்து பெண்ணை பார்க்க சென்ற போது கதறி அழுது நடந்த உண்மைகளை கூறவே அதிர்ந்து போயினர். உடனடியாக திண்டிவனம் காவல்நிலையத்தில் செல்வமணி மீது புகார் அளித்தனர்.

போலி சாமியார் கைது

போலி சாமியார் கைது

திண்டிவனம் மகளிர் காவல்நிலைய போலீசார், ஓங்கூருக்கு வந்து செல்வமணியையும், அவனுக்கு உதவியாக இருந்த ஹேமாவையும் கைது செய்து அள்ளிச்சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். சிறையிலும் மந்திரம், தந்திரம் என்று ஆரம்பிக்காமல் இருந்தால் சரிதான். போலிகளை நம்பாதீர்கள் என்று எத்தனையோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் கடைசியில் பணத்தை மட்டுமல்லாது பெண்களின் மாணத்தையும் இழந்து நிற்கின்றனர் என்பதுதான் வேதனை. இன்னும் எத்தனை போலிகள் இருக்கிறார்களோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+