பேரப் பிள்ளைகள், பாட்டி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலி- உயிரை குடித்த கல் குவாரி!
விழுப்புரம் : திண்டிவனம் அருகே கல் குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பெருமுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி புஷ்பா (60). இவர் தனது மகளின் குழந்தைகளான வினோதினி (16), ஷாலினி (14), கிருஷ்ணன் ( 8) ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் துணி துவைத்துவிட்டு குளித்துவிட்டு வருவதற்காகச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நீச்சல் தெரியாமல் பேரக் குழந்தைகள் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகியோர் தவறுதலாக நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற மூதாட்டி முற்பட்டபோது அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, குவாரி தண்ணீரில் மூழ்கிய புஷ்பா மற்றும் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி, பேரன், பேத்திகள் என நான்கு பேர் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications