வேலூர் டூ விழுப்புரம்.. இன்னும் 7 நாள்.. தூத்துக்குடிக்கும் குட்நியூஸ்.. நிமிரும் தமிழ்நாடு.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு குட்நியூஸ் ஒன்று காத்திருக்கிறது.. இதுகுறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், சென்னை நகரமே ஆச்சரியத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.. குறிப்பாக, சென்னை மட்டுமல்லாமல், சென்னையின் புறநகர் பகுதிகளில் ஐ.டி. கம்பெனிகளின் எண்ணிக்கை பெருகியபடியே வருகிறது. அந்தவகையில், கடந்த 2000-ம் ஆண்டில்தான் டைடல் பார்க் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.
சென்னை: சென்னையின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படும் டைடல் பார்க் OMR சாலையில் அமைந்திருக்கிறது.. 1,280,000 சதுரடியில் அமையப் பெற்றுள்ளது.. இது இந்தியாவின் சிங்கிள் பெரிய தொழில்நுட்ப பூங்கா ஆகும். டைடல் பார்க் துவங்கப்பட்ட ஆண்டிலிருந்தே தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சியானது சென்னையை கலக்கி கொண்டிருக்கிறது.

Happy News for Vellore to Vizhupuram and mini tidel park Tidel Neo at Viluppuram soon by Tamil Nadu Government

மனித வளம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கல்லூரிகள் போன்றவையெல்லாம், இந்த துறையின் அதிவேக வளர்ச்சிக்கு வித்திட்டது என்றே சொல்லலாம். எனவேதான், பல முன்னணி நிறுவனங்களும் சென்னையில் தங்களது வளர்ச்சி மையத்தை அமைக்க முனைப்பு காட்டி வருகின்றன. அதற்கேற்றார்போல், 2வது, 3வது நிலை நகரங்களில் டைடல் பார்க் பணிகளை தற்போதைய திமுக அரசும் முன்னெடுத்து வருகிறது.

ஐடி பூங்கா: நகரங்களில் அமைய போகும் சிறிய ஐடி பூங்காக்கள் என்பதால், இதற்கு "மினி டைடல் பார்க், டைடல் நியோ என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அந்தந்த நகரங்களில் டைடல் பார்க் துவங்கப்படுவதால், இளைஞர்களுக்கு அவர்களது சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்... உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும்.. இதனால், அந்தந்த மக்களின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் முன்னேறும் என்று நம்ப்படுகிறது.

அந்தவகையில், தற்போதது, விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் ஆகிய நகரங்களில் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த முக்கிய நகரங்களில், 50,000 முதல் 1 லட்சம் சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டப்படுகின்றன.

விழுப்புரம்: இதில், விழுப்புரத்தை பொறுத்தவரை, மொத்தம் 63 ஆயிரம் சதுர அடியில், 4 மாடிகள் கொண்டதாக "டைடல் நியோ" அமைந்துள்ளது.. இறுதிக்கட்ட பணிகளும் நடந்து முடிந்துள்ளன.. விருப்பமுள்ள நிறுவனம் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

இந்த கட்டிடத்தைதான், முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார்.. இதுபோலவே, வேலுாரில் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், 60,000 சதுர அடியில் தரை தளம் மற்றும் 4 மாடிகளுடன் கூடிய மினி டைடல் பார்க் கட்டும் பணி, கடந்த வருடம் பிப்ரவரியில் துவங்கியது.. இந்த பணிகளின் கட்டுமான பணிகளும் வரும் ஜுன் மாதம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

கட்டுமான பணிகள்: இதேபோல்வே, தூத்துக்குடி மாவட்டம் மீளாவிட்டான் கிராமத்திலும் மினி டைடல் பார்க் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில், அனைத்து மினி டைடல் பார்க் கட்டுமானப் பணிகளையும் விரைவுபடுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில், அவைகள் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளன.. அந்தவகையில், இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்புகள் கிடைக்க போவதால், தமிழகத்தின் நிலைமை அடுத்த லெவலுக்கு உயரப்போகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+