Ramadoss: பாமகவில் நானே ராஜா.. 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உண்டு.. ராமதாஸ் பரபர அறிவிப்பு!
விழுப்புரம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணியுடன் தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனம் ராமதாஸ் அறிவித்துள்ளார். படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் வெற்றிபெறுவது எப்படி என்று நிர்வாகிகளுக்கு கற்றுக் கொடுத்ததாக கூறிய ராமதாஸ், தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றும் கூறியுள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அவருக்கு செயல் தலைவர் பதவியை அளித்தார். இதனைத் தொடர்ந்து சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் கூட அன்புமணி - ராமதாஸ் இடையிலான மோதல் வெளிப்படையாகவே தெரிந்தது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை கணக்கில் கொண்டே பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் மாநாட்டிலேயே தந்தை மற்றும் மகன் இடையிலான மோதல் வெளிப்பட்டதால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் பேர பலம் குறைக்கப்படும் என்று பலரும் விமர்சிக்க தொடங்கினர்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதலுக்கு இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட முகுந்தனே முக்கிய காரணம். அன்புமணி சகோதரி மகனான முகுந்தனுக்கு கட்சியில் பதவி அளிக்கப்படக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கேற்ப முகுந்தனுக்கு மாநாட்டின் மேடையில் இருக்கை அளிக்கப்படாததால் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் தைலாபுரத்தில் பாமக மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகளில் நாம் வெற்றிபெற வேண்டும்.
ஆட்சியமைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். அவர்களின் ஆலோசனையையும் கேட்டு அறிந்து கொண்டேன். தனித்து போட்டியிட்டாலும் 40 தொகுதிகளில் வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். நிச்சயம் கூட்டணி உண்டு. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெல்வதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்துள்ளேன். சிங்கத்தின் கால்கள் பழுதாகாத போது சீற்றம் இன்னும் அதிகமாக தானே இருக்கும்.
ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற சீற்றம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. பாமகவை பொறுத்தவரை நானே ராஜா என்று தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்றிருப்பதால், அந்த கூட்டணி பாமக இடம்பெறுமா என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று திருமாவளவன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications