நான்தான் பாமக தலைவர்! அன்புமணியை யாரும் அப்படி அழைக்க வேண்டாம்! ராமதாஸ் பேட்டி
விழுப்புரம்: பாமகவின் தலைவர் நான்தான், விரைவில் கூட்டணி குறித்து நல்ல செய்தியை தருவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வரும் தேர்தல் கூட்டணி குறித்து நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அங்கு நடந்த பாமக செயற்குழு கூட்டத்திற்கு பின் அவர் பேசினார்.

அவர் கூறியதாவது: "பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்; இதுதான் 'சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி' என்று மக்கள் பேசுகின்ற அளவிற்கு இந்தக் கூட்டணி அமையும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக சீக்கிரமே நல்ல முடிவு அறிவிக்கப்படும். பாமகவின் தலைவர் நான்தான்.. அன்புமணி அல்ல. டெல்லி நீதிமன்ற தீர்ப்பின்படி, பாமகவின் சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை அன்புமணி உபயோகிக்க கூடாது.
அப்படி உபயோகப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பு. ஊடகங்களும், கட்சியின் தலைவர் என அன்புமணி சொல்வதை அப்படியே போடுவது என வருத்தமளிக்கிறது. இனி கட்சியின் தலைவர் அன்புமணி என போட வேண்டாம்.
எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக.. தேர்தல் வாக்குறுதியில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் மக்கள்தான் தீர்ப்பளிப்பார்கள். ஆனால், மக்கள் தான் உண்மையான எஜமானர்கள். அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானிப்பார்கள்." இவ்வாறு டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications