ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால்.. இந்த 2 வரங்களைத்தான் கேட்பேன்.. ராமதாஸ் பேச்சு!
விழுப்புரம்: பாமகவின் 35வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடி ஏற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்களைத்தான் கேட்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 35ஆம் ஆண்டு துவக்க நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பாமகவின் துவக்க நாளை முன்னிட்டு, திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்கள் தான் கேட்பேன். ஒன்று ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழ்நாடு, மற்றொன்று, ஒரு சொட்டு மழை நீர் கூட கடலில் போய் கலக்கக்கூடாது எனக் கேட்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளால் பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பதாகவும், விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, குற்ற சம்பவங்கள், இளம் கைம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரியும் பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் 35வது ஆண்டு துவக்க நாள் விழாவிலும் ராமதாஸ் மதுவிலக்கு குறித்துப் பேசியுள்ளார்.
-
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications