2-வது குழந்தையை கள்ளக்காதலனுக்கு பெற்ற மணிமேகலை.. கணவன் கண்டுபிடித்ததால் ஆத்திரத்தில் கொலை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கடந்த 8 மாதங்களுக்கு முன் கொத்தனார் கொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலை ஆற்றில் வீசிய வழக்கில் இறந்தவரின் மனைவி, அவரது கள்ளக் காதலன் உட்பட 3 - பேரை திருநாவலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பெங்களூரில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது சொந்த ஊரைச் சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பாலமுருகன் தனது மனைவியை கிராமத்திலேயே தங்க வைத்துவிட்டு பெங்களூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு அவ்வப்போது தனது ஊருக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 8- மாதங்களுக்கு முன் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில மணிமேகலை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதிர்ச்சி
தனது மனைவியை பார்ப்பதற்காக சென்ற பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார். மனைவி மணிமேகலைக்கும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சிலர் கூறியதால் சந்தேகத்துடன் இருந்த பாலமுருகன் குழந்தை என் உருவத்தைப் போல் இல்லை எனவும் மணிகண்டனைப் போல் இருப்பதாகவும் கூறிவிட்டு கோபத்தில் யாரிடமும் பேசாமல் சென்றதாக கூறப்படுகிறது.

பாலமுருகன் காணவில்லை
இரண்டு மூன்று மாதங்களாக பாலமுருகனை நேரில் பார்க்க முடியாமலும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்ததால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருக்கோவிலூரை அடுத்துள்ள வேங்கூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகனின் சகோதரியின் கணவர் கோவிந்தராஜ் என்பவர் தனது மைத்துனரை காணவில்லை என திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மணிகண்டன்
இதனை தொடர்ந்து போலீசார் பாலமுருகனின் குடும்பத்தினர் மற்றும் மணிமேகலையிடமும் விசாரணை மேற்கொண்டும் சரியான துப்பு கிடைக்காததால் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தினர். இதில் மணிமேகலைக்கும் - மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

இடையூறு
இதனையடுத்து போலீசார் மணிகண்டனை காவல் நிலையம் அழைத்து சென்று உரிய முறையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிகண்டன் கூறுகையில் பாலமுருகன் சந்தேகப்பட்டு சண்டை போட்டு . கிளம்பி விட்டார். இனியும் உயிரோடு விட்டு வைத்தால் நமது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார்.

சுவற்றில் தள்ளி கொலை
எனவே அவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என மணிமேகலை தொலைபேசியில் கூறியதையடுத்து அன்று இரவு பேருந்தில் இருந்து இறங்கி வந்த பாலமுருகனை பின் தொடர்ந்து சென்று அவரது வீட்டில் நுழைந்து பாலமுருகனை சுவற்றில் தள்ளி கடுமையாக தாக்கினேன்.

சகோதரன் உதவி
வீட்டில் தண்ணீர் பிடிக்க வைத்திருந்த பித்தளை பாத்திரத்தாலும் , சுத்தியலாலும் கடுமையாக தாக்கியதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிரிழந்தார் என்றார். பாலமுருகன் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட மணிகண்டன் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்று தனது சகோதரர் தனசேகரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

சிறையில் அடைப்பு
பின்னர் இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்று சடலத்தை சாக்கு பையில் கட்டி அதிகாலையில் அங்குள்ள இடுகாட்டில் எரித்து எலும்புகளை பெரிய கற்களை கொண்டு நொறுக்கி சாம்பலை அருகில் உள்ள ஆற்றில் கரைத்து விட்டதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து திருநாவலூர் போலீசார் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications