பார்றா... கமலோட பிரச்சார டெக்னிக்க! குறைசொல்லி ஓட்டுக்கேட்க மாட்டாராம்!
திண்டிவனம்: மற்றவர்களின் குறைகளை சொல்லி நாங்கள் ஓட்டுக் கேட்க மாட்டோம், அதேநேரம் எங்களின் நிறைகளை சொல்லி ஓட்டுக் கேட்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
விழுப்புரம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி மற்றும் ஆரணி தொகுதி வேட்பாளர் சாஜித் ஆகியோரை ஆதரித்து திண்டிவனத்தில் அக்கட்சியின் நிறுவனர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது கமல் பேசுகையில், "மற்றவர்களின் குறைகளை சொல்லி நாங்கள் ஓட்டுக் கேட்க மாட்டோம். எங்களின் நிறைகளை சொல்லி ஒட்டுக் கேட்ப்போம்.

டெல்லியில் குரல்
நாங்கள் உங்களை தேடி வந்திருக்கிறோம். மக்கள் நீதி மய்யம் இப்போது வீறுடை போடுவதற்கு உங்கள் அன்பு தான் காரணம். உங்கள் தேவைகளை அறிந்தவர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி. உங்களுக்ககாக போராடியவர். இனியும் போராடுவார். இதேபோல் தான், ஆரணி வேட்பாளர் சாஜித். மக்களுக்காக போராடக்கூடியவர். இந்த இருவரும் தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செயாவர்கள். அவர்களின் குரல் டெல்லியிலே ஒலிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

மாற்றத்தை நோக்கி
மாற்றத்துக்காக என் தம்பிமார்க்ளை ஊர் ஊராக வைத்து சுற்றிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் தமிழகம் எங்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நேர்மையான கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள். நேர்மையும் நாங்களும் நெருங்கிய உறவுகள். அதனால் தான் தேடிப்பிடித்து மண்ணின் மைந்தன் அன்பின் பொய்யாமொழியும், சாஜித்தையும் வேட்பாளராக அறிவித்து இருக்கிறோம். அவர்கள் இருவருக்கும் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களியுங்கள்.

பதவி நீக்கம்
எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்ற பின், அவர் பணி சரியில்லை என்றால், உடனே பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை உங்களிடம் அளிப்போம். ஆனால் அது நிகழக்கூடாது என்பதற்காக நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை நாங்களே உங்கள் சார்பாக வேட்பாளர்களிடம் கேட்டுவிட்டோம்.

பணம் கிடையாது
இங்கே பணப்பட்டுவாடா இருக்காது. ரகசியமாக காவல்துறைக்கு தெரியாமல் உங்கள் கையிலே பணத்தை வைக்கும் வேலை இருக்காது. ஆனால் ஐந்து வருடங்கள் கழித்து பாருங்கள். நாங்கள் உங்களுக்கு கொடுத்திருப்பது பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 5 ஆயிரம், 10 ஆயிரத்துக்கு வாக்கை கொடுத்துவிட்டால், ஐந்து வருடத்துக்கு உங்களை விற்றுவிடுகிறீர்கள். அந்த ஐந்து வருடத்தை நீங்கள் வாங்கிய தொகையை வகுத்து போட்டால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வராது.
வாக்கை விற்காதீர்
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஏழ்மையை புரிந்து கொண்டு, உங்கள் வறுமையை பயன்படுத்தி, பணத்தை காட்டி அன்றைக்கான வேலையை முடித்துக் கொள்கிறார்கள். தயது செய்து ஓட்டுக்காக அந்த பணத்தை வாங்காதீர். அவர்கள் உங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையில் இருந்து எடுத்துக்கொள்வார்கள்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications