சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் போஸ்டர்...நாங்களும் ஒட்டுவோம்...அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : நான் சொன்னால் சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் போஸ்டர்கள் ஒட்டுவார்கள் என அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசி உள்ளார்.

சசிகலாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அதிமுக் கட்சிக்குள் பலர் கருத்து கூறி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க பல இடங்களில் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர். இதில் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

Minister C.V.Shanmugan on poster for welcoming sasikala

இந்நிலையில் விழுப்புரத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ.ரகுபதி என்பவர், பொய் வழக்கில் இருந்து விடுதலை பெற்று பெங்களூருவில் இருந்து வருகை தரும் சின்னம்மா அவர்களை வரவேற்கிறோம் என்ற வாசகத்துடன் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்.

இது பற்றி விழுப்புர மண்டல அதிமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆவேசமாக பதிலளித்த அவர், சசசிகலாவிற்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஓட்டுவது என்ன பெரிய விஷயமா? நான் சொன்னால் சசிகலாவிற்கு எதிராக ஒரு லட்சம் போஸ்டர் ஓட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது ஒருபுறம் அதிமுக.,விற்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால், சசிகலாவை வரவேற்க ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மறுபுறம் புயலை கிளப்பி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+