விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீரபாண்டி கிராம சபை கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் பொன்முடி.. பரபரப்பு!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராம சபை கூட்டத்திலிருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலேயே வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. கிராமங்கள் மேம்பட்டால்தான் இந்த ஒரு முன்னேறும் என காந்தி கூறியிருந்தார்.

அது போல் விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்றும் கூறியிருந்தார். இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்தநாள் அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஓசி பயணம்.. விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்.. அந்த கேள்வியை விடுப்பா! -அமைச்சர் பொன்முடி ஓசி பயணம்.. விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்.. அந்த கேள்வியை விடுப்பா! -அமைச்சர் பொன்முடி

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிவர். அந்த வகையில் இன்றைய தினம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் கிராமங்களில் கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டியில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது.

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதிகள் குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். குடிநீருக்காக தாங்கள் மிக நீண்ட தூரம் செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். மழைக்காலம் வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கவும் கோரிக்கை எழுந்தது.

10 நாட்கள் அவகாசம்

10 நாட்கள் அவகாசம்

அப்போது அவர்களுடயை கோரிக்கைகளை கேட்ட பொன்முடி, இன்னும் 10 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். ஆனால் அமைச்சரின் உறுதிமொழியை ஏற்காத பொதுமக்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. அதுவரை செய்யாத நீங்கள் இந்த 10 நாட்களிலா செய்ய போகிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர்.

அதிமுக ஒன்றிய கவுன்சிலர்

அதிமுக ஒன்றிய கவுன்சிலர்

அவர்களை சமாதானப்படுத்த அமைச்சர் பொன்முடியும் அவருடன் இருந்தவர்களும் முயற்சித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். இந்த நிலையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதிதான் ஆட்களை உள்ளே இறக்கி பிரச்சினையை பெரிதாக்குகிறார் என புகார் கூறிய அமைச்சர் பொன்முடி அங்கிருந்து வெளியேறினார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்

அமைச்சர் மா சுப்பிரமணியன்


கிராம சபை கூட்டத்திலிருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலேயே வெளியேறதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பயிற்சி வகுப்பிற்கு சென்ற அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆட்கள் குறைவாக உள்ளதாகவும் பயிற்சி வகுப்பிற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று கூறியும் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

English summary
Minister Ponmudi leaves from Gram Sabha meeting in Villupuram district, Veerapandi Village as people starts arguing with him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X