இப்படியும் கூட சாவு வரலாம்.. கள்ளக்குறிச்சியை அதிர வைத்த முருகனின் மரணம்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய முருகன் என்பவர், அதிக போதையால் தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் விழுந்தார். அதிக போதையால் எழுந்துவரமுடியாமல் தண்ணீர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்,
குடி போதை பலரது உயிரை பறித்து வருவது கண்கூடாக தெரிகிறது. மது குடிக்க பணம் கிடைக்காததால் குடிகார்கள் வன்முறையில் இறங்குவதால் குடும்பமே சோகத்தில் மூழ்கும் அளவுக்கு கொலைகள் நடக்கிறது. அடிதடிகள் நடக்கிறது
மதுவால் பல்வேறு குடும்பங்கள் அழிந்து கொண்டுதான் வருகின்றன. மது போதையில் ஏற்படும் விபத்துக்களால் பேரிழப்புகளும் ஏற்படுகின்றன. மதுபோதை ஆசாமிகள் உயிரிழப்பதுடன் அப்பாவிகளும் இறப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில்மதுபோதையால் 40வயது நபர் கள்ளக்குறிச்சியில் பலியாகி உள்ளார்.

பாலத்தில் மது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அண்ணா நகர் மூன்றாவது தெருவை சார்ந்த முருகன் (40) என்பவர் திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள பாலத்தின் மீது இரவு உட்கார்ந்து மது அருந்தியுள்ளார்.

தண்ணீர் விழுந்து பலி
மது போதை அதிகமானதால் நிலைதடுமாறி அருகில் உள்ள தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார் பின்னர் அவரால் அதிக போதையில் இருந்ததால் தண்ணீரில் இருந்து எழுந்து வர முடியாமல் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மிதந்த உடல்
இதற்கிடையே இரவு முழுவதும் உறவினர்கள் தேடியும் முருகன் கிடைக்காததால் காலையில் திருவெண்ணைநல்லூர் சாலை பாலத்தின் அருகே தண்ணீரில் யாரோ இறந்து உடல் மிதக்கிறது என்று அந்த வழியாக வாக்கிங் சென்றவர்கள் பார்த்துச் கூறியிருக்கிறார்கள்.

போலீஸ் வருகை
அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்க்கும் போது ஒரு ஆண் சடலம் மிதந்து. பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி தரைக்கு கொண்டு வந்து பார்த்தனர். அவர் அண்ணாநகர் 3வது தெருவை சேர்ந்த முருகன் என்பது அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது போதை அதிகமானதால் தண்ணீர்ல் விழுந்து குடிபோதை ஆசாமி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications