குடிச்சு சாகறாங்க.. தாலி அந்து போகுது.. பறையடித்தபடி வந்த பிரகலதாவிடம் குமுறிய பெண்கள்
Recommended Video

விழுப்புரம்: ஊர் மக்களையே அதிர வைத்து கட்டி இழுத்து கொண்டுவந்துவிட்டது அந்த பறை சத்தம்! பறையை அடித்தது இசைக்கலைஞர்கள் இல்லை.. விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதா தான்!
விழுப்புரம் தனி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக களம் இறங்கி உள்ளார் பிரகலதா என்ற பெண் வேட்பாளர்.
திருமதி பிரகலதா ராம், எம்ஏ எம்எட் படித்திருக்கிறார். கொஞ்ச காலம் பேராசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார். 8 வழிச்சாலைக்கு எதிராக போராடி சிறை சென்ற முதல் பெண் என்பது மறைக்கப்பட்ட உண்மை!

டிரம்ஸ் சத்தம்
எல்லா கட்சிக்காரர்களும் பிரச்சாரத்திற்கு முன்பு டிரம்ஸ் அடித்து மக்களை அலர்ட் செய்யும்போது, இந்த கட்சி மட்டும் பறையை கையில் எடுத்துள்ளது. அதுவும் வேட்பாளரான பிரகலதாவே பறையை அடித்து வாக்கினை திரட்டி வருகிறார்.

கரும்பு விவசாய சின்னம்
"இந்த விழுப்புரத்துல நிறைய பேர் குடிச்சு குடிச்சு சாகறாங்க.. எங்க தாலி அறுது.. நீங்கதாம்மா ஏதாவது செஞ்சு இந்த டாஸ்மாக்கை எடுத்துடணும்" என்று பிரகலதாவிடம் தொகுதி பெண்கள் தங்களையும் அறியாமல் கண்ணீர் மல்க கேட்கிறார்கள். இவர்களிடம் உறுதி அளித்து பிரச்சாரம் செய்து வரும் பிரகலதா, பறை அடித்தபடியே கரும்பு விவசாய சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்றும் கேட்டு வருகிறார்.

வேகமாக அடிக்கிறார்
ஒரு பெண் வேட்பாளர், கையில் பறையை எடுத்து கொண்டு தெருத் தெருவாக அடித்து வாக்கு சேகரித்து வருவது கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இசை கலைஞர்களை போலவே பறையை வேகமாக அடிக்கவும், கிராம மக்கள் ஒன்று திரண்டனர்!

பிரகலதா
பறையோசை அங்கிருந்தோரின் நாடி, நரம்பு வழியே மூளைக்கு புது மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது. வித்தியாசமாக வாக்கு திரட்டி வரும் பிரகலதாவுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து வரவே செய்கிறது
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications