“ஓபிஎஸ் நிகழ்ச்சியில இப்படியா சொதப்புவீங்க..” பிரியாணியை அடித்துப் பிடித்து அள்ளிச் சென்ற மக்கள்!
விழுப்புரம்: செஞ்சி அருகே அ.தி.மு.க ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்ட பெட்ரோல் பங்க் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரியாணி மற்றும் பொருட்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சிக்கு முறையாக ஏற்பாடு செய்யப்படாததும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததுமே இந்த தள்ளுமுள்ளு நிகழ்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்வில் பொதுமக்கள் அடித்துப் பிடித்து பொருட்களை அள்ளிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செம்மேடு கிராமத்தில் அ.தி.மு.க பிரமுகர் கதிரவன் என்பவரின் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. அ.தி.மு.க ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு இந்த பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வைத்திருந்த கல்யாண சீர்வரிசை மற்றும் தென்னை மரக்கன்றுகளை ஒரு சிலருக்கு மட்டும் மேடையில் கொடுத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

தள்ளுமுள்ளு
இதையடுத்து உதவி பெறுவதற்காகக் காத்திருந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த சீர்வரிசை பொருட்கள், தென்னை மரக் கன்றுகள் மற்றும் அரிசி ஆகியவற்றை முண்டியடித்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றனர்.
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியில் போதிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.

பிரியாணி
அதுமட்டுமின்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பிரியாணியை பொதுமக்களே தாங்களே அடித்துப் பிடித்து எடுத்துச் சென்றனர்.
மேலும் ஒரு சிலர் கல்யாண சீர்வரிசை பொருட்கள் அடங்கிய பொருளை எடுத்துச் செல்ல போட்டி போட்டு ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேரம் காத்திருப்பு
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுகவினர் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து சென்றதால் பயனாளிகள் தங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்குமா என்ற சந்தேகத்திலேயே போட்டி போட்டு அள்ளிச் சென்றுள்ளனர். நிகழ்ச்சிக்கு முறையாக ஏற்பாடு செய்யப்படாததால் மக்கள் தள்ளு முள்ளு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications