பெட்ரோல் பங்க் மீது நாட்டு குண்டு வீச்சு.. உடல் சிதறி மேலாளர் பலி.. விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளரை நான்கு பேர் கொண்ட கும்பலால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை கம்பன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு மேலாளராக சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இன்று நண்பகல் வழக்கம்போல் பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். மேலாளர் சீனிவாசன் பெட்ரோல் பங்கில் உள்ள தனது அறையில், வரவு, செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென பெட்ரோல் பங்கிற்குள் கார் ஒன்று வேகமாக நுழைந்துள்ளது. காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் நான்கு பேர், சீனிவாசன் இருந்த அறையின் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஒரு நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது. குண்டுவீச்சில் அங்கிருந்த மேலாளர் சீனிவாசன் படுகாயம் அடைந்தார். உடனே அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் சிறிது நேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொது மக்கள் திரண்டனர்.

இதனையடுத்து வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மாவட்ட போலீசார், சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ரமேஷிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டியுள்ளது. ரமேஷ் பணம் தர மறுத்து, காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ள, அந்த ரவுடி கும்பல் ரமேஷ் மீதுள்ள ஆத்திரத்தில், அவரது பெட்ரோல் பங்க் மீது வெடிகுண்டு வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications