"நம்ம ராமதாஸ் ஐயாவா இது".. 86 வயதிலும் குறையாத பவர்.. நீச்சலடித்து அசத்தல்
விழுப்புரம்: பாமகவுக்கு இது சோதனை காலம். மற்ற கட்சிகள் எல்லாம் சட்டமன்ற தேர்தலுக்கான ரேஸில் ஈடுபட்டுள்ளன. பாமக மட்டும் சொந்தக் கட்சிக்குள்ளேயே குஸ்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராமதாஸ் தைலாபுரம் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
"என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்.." இந்த பாடல் இன்றைய தேதிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பக்காவாக பொருந்தும். திமுக, அதிமுக என்று தமிழகத்தை இரு பெரும் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து அரசியலில் தவிர்க்க முடியாத நபராக பாமக நிறுவனர் ராமதாஸ் இருந்தார்.

பொறுத்தது போதும் பொங்கி எழு என்பது போல, 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. "மாறி மாறி திராவிட கட்சிகளை ஆட்சியில் அமரவைத்து விட்டோம்." என்பதுடன் "மாற்றம், முன்னேற்றம், அன்புமணி" என்று டேக்லைனுடன் களத்தில் இறங்கினார்கள். அந்த தேர்தலில் ராமதாஸின் மகன் அன்புமணி தான் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளர்.
நாளடைவில் கட்சியின் தலைவராகவும் அன்புமணி அறிவிக்கப்பட்டார். "பெரிய ஐயாவுக்கு வயசாகிடுச்சு.. இனிமேல் நமக்கு சின்னவருதான்." என்ற பாமகவினரின் மைண்ட் வாய்ஸ் நீண்ட நாளுக்கு நீடிக்கவில்லை. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வரும் பனிப்போர் பொது வெளியிலேயே அணுகுண்டாக பாய்ந்து பாமகவுக்குள் களேபரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய மகளின் மகன் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததில், அன்புமணிக்கும், அவருக்கு மாறுபட்ட கருத்து வெளிப்பட்டது. இருவரும் மேடையில் வாக்குவாதம் செய்து கொண்டனர். தொடர்ந்து கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இருவருக்கும் மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது.
பாமகவின் பவர் சென்டராக தைலாபுரம் உள்ள நிலையில், "இனிமேல் என்னை பார்க்க வருவோர் பனையூரில் புதிததாக கட்டப்பட்ட அலுவலகத்துக்கு வாருங்கள்." என்று அன்புமணி தனி டிராக்கில் பயணிக்க தொடங்கினார். "ஓ.. அப்படியா விஷயம். நான் பழைய பன்னீர்செல்வமா வரேன்." என்று என்ட்ரி கொடுத்த ராமதாஸ், "இது நான் உருவாக்கிய கட்சி. இனிமேல் கட்சி தலைவர் நான்." என்று தடலாடியாக அறிவித்தார்.
மற்ற கட்சிகள் எல்லாம் 2026 தேர்தலுக்கு பட்டை தீட்டி வந்த நிலையில், பாமகவின் இந்த அப்பா - மகன் யுத்ததால் தொண்டர்கள் சோர்வடைந்தனர். கடந்த வாரம் ராமதாஸ் 2026 தேர்தல் குறித்து ஆலோசிக்க மாவட்ட நிர்வாகிகளை தைலாபுரத்துக்கு அழைத்திருந்தார். சுமார் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்திருந்த நிலையில் 15 நிர்வாகிகள் கூட வராமல் மாஸ் கட் அடித்தனர்.
அன்புமணியும் வராமல் தர்மயுத்தம் நடத்தினார். "ச்சே.. எப்படி வாழ்ந்த மனுசன் இப்படி ஆகிடுச்சே.." என்று தைலாபுரத்துக்கு வந்த ஒரு சில நிர்வாகிகள் குமுறி சென்றனர். அதற்கெல்லாம் சோர்வடையாத ராமதாஸ், "படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது பற்றி ஆலோசித்தோம். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்.. சீற்றம் குறையாது." என்று பன்ச் அடித்தார்.
இந்நிலையில் ராமதாஸ் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தைலாபுரத்தில் உள்ள தன் வீட்டில் யோகா செய்து, பல்ஸ் மீட்டரில் உடல்நலத்தை சோதித்தபடி நீச்சல் குளத்தில் இறங்கினார். நீச்சல் குளத்திலும் யோகா, வார்ம் செய்தபடி ராமதாஸ் நீல்ல அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதற்கு பாமகவினர், "அப்போ புரியல.. இப்ப புரியுது. ஐயா ஒரு முடிவோட தான் இருக்கார்.", "ஐயாவுக்கு 86 வயசாச்சு.. வயசானாலும் அவரோட ஸ்டைலும், ஆரோக்கியமும் மாறவே இல்லை.", "ஐயா சுனாமிலயே ஸ்விமிங்கை போட்டவர்." என்று சிலிர்த்து கமென்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications