இந்தா போகுதே 108..ஆம்புலன்ஸை காட்டி அன்புமணி ராமதாஸ் சொன்ன வார்த்தை.. விறுவிறு விக்கிரவாண்டி தேர்தல்
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்யும் இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வர அதனை தான் தான் கொண்டு வந்ததாக பெருமையுடன் சுட்டிக் காட்டி வருகிறார்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மரணமடைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளனர். அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது.
இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸும் அவரது மனைவி சௌமியா அன்புமணியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சாணிமேடு பகுதியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,"இட ஒதுக்கீட்டுக்காக மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார். எங்கிருந்தோ வந்த அமைச்சர் பணம் கொடுத்து இக்கூட்டத்துக்கு வரவிடாமல் தடுக்க முயற்சித்தார்கள். ஆனால், நாம் பணத்துக்கு மயங்குபவர்களா? இத்தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.
மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவார். முதல்வருக்கு நம்மை கண்டு பயம் வரவேண்டும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே, என்று பிரித்து வாக்களிக்காதீர்கள். ஒரு வாக்குக்கூட திமுகவுக்கு விழக்கூடாது. அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும். நம் உரிமைகளுக்காக நடைபெறும் தேர்தல். இத்தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பியுள்ளது.
பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிடுவார். முதல்வருக்கு நம்மை கண்டு பயம் வரவேண்டும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே, என்று பிரித்து வாக்களிக்காதீர்கள். திமுகவுக்கு ஒரு வாக்குக்கூட விழக் கூடாது" என்றார்.
தொடர்ந்து திறந்த வேனில் சென்று அன்புமணிக்கு ஆதரவாக அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். சாலையோரம் அவர் பேசிக் கொண்டிருந்த போது, அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று சைரனை ஒலித்தவாறு சென்று கொண்டிருந்தது. அதனை சுட்டிக் காட்டிப் பேசிய அன்புமணி, நான் மத்திய அமைச்சராக இருந்த போது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்து மக்களின் உயிரைக் காப்பற்றினேன்.. ஆனால் திமுகவோ, டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மக்களின் உயிருடன் விளையாடுகிறது என்றார். தற்போது இந்த வீடியோவை பாமகவினர் சமூக வலைதலங்களில் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications