குடும்பத்துடன் தைலாபுரம் சென்றார் அன்புமணி ராமதாஸ்.. என்ன மேட்டர்?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்துக்கு வருகை தந்துள்ளார். நாளை மறுநாள் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு நடத்தப்பட உள்ள நிலையில் தைலாபுரம் சென்றுள்ளார் அன்புமணி.

பாமக நிறுவனர் ராமதாஸின் மனைவியும் தனது தாயாருமான சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, அவரை சந்திப்பதற்காக தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Anbumani ramadoss Ramadoss PMK

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கி வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் மாவட்டம் தோறும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அன்புமணி நடைபயணத்திற்கு அனுமதி காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை அன்புமணி துவங்கினார். இந்நிலையில், அண்மையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்த பொதுக்குழுவுக்கு ராமதாஸ் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். ராமதாஸின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி ராமதாஸ் தரப்பில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இன்று அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்துக்கு வருகை அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு முற்றியுள்ள நிலையில், அன்புமணியின் தைலாபுரம் விசிட் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸின் மனைவியும் தனது தாயாருமான சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, அவரை சந்திப்பதற்காக தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் தமது குடும்பத்தினருடன் வருகை தந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ராமதாஸை சந்திப்பாரா என்பது பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+