விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி பலியான சிறுவன்.. ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் பலியான வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் நடந்த பொன்குமார் என்பவரின் இல்ல திருமண விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இவரை வரவேற்பதற்காக மாம்பழப்பட்டு சாலையில் பல்வேறு இடங்களில் திமுக கொடி நடப்பட்டு அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

70 வருடமாக இந்தியா உருவாக்கிய சொத்துக்களை, பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் விற்றுவிட்டார்: ராகுல் தாக்கு 70 வருடமாக இந்தியா உருவாக்கிய சொத்துக்களை, பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் விற்றுவிட்டார்: ராகுல் தாக்கு

திமுக நிர்வாகிகளுக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக சாலையின் இரண்டு பக்கங்களிலும் கொடி கம்பங்கள் நடப்பட்டது. இந்த அலங்கார பணியில் ஈடுப்பட்டு வந்த தினேஷ் என்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானார்

மரணம்

மரணம்

கொடி நடும் போது மேலே சென்ற மின்சார வயரில் கொடி கம்பம் உரசி தினேஷ் ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த தினேஷ் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். கட்சி அலங்கார பணியில் சிறுவனை ஈடுபடுத்தியதும், அவரின் மரணமும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தகவல் அறிக்கை

தகவல் அறிக்கை

முதல் தகவல் அறிக்கையில் யார் பெயரும் குறிப்பிடாத நிலையில், தினேஷ் மரணம் அடைந்தது தொடர்பாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. தினேஷ் மரணத்திற்கு அமைச்சர் பொன்முடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக ஜெயக்குமார் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை

கோரிக்கை

இந்த நிலையில்தான் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அலங்கார பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் வெங்கடேசனை போலீசார் கைது செய்து உள்ளனர். 18 வயதுக்கு குறைவான நபரை வைத்து இவர் அலங்கார பணிகளை மேற்கொண்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

முன்னதாக விழுப்புரத்தில் கொடி கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் பலியானது அதிர்ச்சியை தருகிறது, உடனே பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். 13 வயதான தினேஷை இழந்து வாடும் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை. தினேஷை இழந்து தவிக்கும் குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று துணை நிற்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Police arrested the contractor Venkatesan as a schoolboy died while erecting DMK Flag in Villupuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X