கர்ப்பிணியை இப்படி.. அடிச்சு கொன்னு.. தொங்க விட்டுட்டாங்களே.. பரிதாப சூர்யா.. கதறும் உறவினர்கள்!

5 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: "கர்ப்பிணி பெண்ணை இப்படி அடிச்சி கொன்னு.. தொங்க விட்டுட்டாங்களே" என்று இளம்பெண்ணின் உறவினர்கள் கதறுகின்றனர்.. மகளின் மர்ம மரணத்துக்கும் விசாரணை கோரி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் கணேஷ்பாபு. இவருக்கு 28 வயதாகிறது. புதுவையில் ஒரு சோப்பு கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்க்கிறார்.

pregnant woman died near villupuram

தொட்டிமேடு பகுதியை சேர்ந்த சூர்யா என்ற 20 வயது பெண்ணுடன் 7 மாசத்துக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இதையடுத்து, சூர்யா 5 மாசம் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்திருக்கிறது.

இந்த சண்டை நேற்றும் வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ்பாபு சூர்யாவை அடித்துள்ளார். இதனால் நீண்ட நேரம் அழுதுள்ளார் சூர்யா. பின்னர் திடீரென சூர்யா தூக்கில் தொங்கிவிட்டதாக கணேஷ்பாபு மாமியார் வீட்டுக்கு போன் போட்டு சொல்லவும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே விரைந்து வந்து, வீட்டில் தூக்கில் தொங்கிய மகளை மீட்டு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் சூர்யாவின் அப்பா பாலகிருஷ்ணன். ஆனால், சூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லியதை கேட்டு கதறி அழுதார்.

பின்னர், திருவெண்ணைநல்லூர் போலீசில் "என் மகளை கணேஷ்பாபும், அவரது அம்மா லட்சுமியும் அடித்து, தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.. என் மகளின் சாவில் மர்மம் உள்ளது.. இது சம்பந்தமாக விசாரணை வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இதன்பேரில் போலீசாரும் விசாரிணை நடத்தி, கணேஷ்பாபு, அவரது அம்மா லட்சுமியை கைது செய்துள்ளனர். 5 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+