வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் மீட்டிங் நடத்திய ராமதாஸ்! என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என அறிவுரை!
விழுப்புரம்: வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது.
அதில் நடப்பாண்டில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு விரிவாக விளக்கிக் கூறப்பட்டது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

வன்னியர் சங்கம்
வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

என்னென்ன பணிகள்
அனைத்து மாவட்ட வன்னியர் சங்க செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். வன்னியர் சங்கத்தின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. நடப்பாண்டில் வன்னியர் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல்
வன்னியர் சங்கத்தினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ராமதாசும், அன்புமணி இராமதாசும் விளக்கிக் கூறினார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையாக இன்னும் ஓராண்டு கூட இல்லாததால் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாமக கூட்டணி நிலைப்பாடு குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

குழு புகைப்படம்
வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் அமர்ந்து ராமதாசும், அன்புமணி ராமதாசும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளை உற்சாகம் கொள்ள வைத்தது.












Click it and Unblock the Notifications