அன்புமணியை நீக்க ரெடியான ராமதாஸ்? ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாமக பொதுக்குழுவில் பரிந்துரை!
விழுப்புரம்: பாமகவில் தந்தை - மகன் மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டது. ராமதாஸை அவமானப்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அவர் மீது புகார் தெரிவித்துள்ளது. மொத்தம் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளுடன் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை அளித்துள்ளது.
பாமகவில் தந்தை - மகன் மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அன்புமணி தலைவராக மேலும் ஒரு ஆண்டுக்கு பதவி வகிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு புகார்
இந்த நிலையில் அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது என்றும், வரும் 17 ஆம் தேதி நடக்கும் சிறப்பு பொதுக்குழு தான் செல்லும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். அதன்படி இன்று பாமக சிறப்பு பொதுக்குழு விழுப்புரத்தில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாசே செயல்படுவார் எனவும், வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும் ராமதாசுக்கே முழு அதிகாரம் வழங்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டது. ராமதாஸை அவமானப்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அவர் மீது புகார் தெரிவித்துள்ளது. மொத்தம் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளுடன் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை அளித்துள்ளது. பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பாக அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜிகே மணி 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-
16 குற்றச்சாட்டுகள் என்னென்ன?
* பணம், பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியும், வாகன ஏற்பாடுகள் செய்தும் பாமக நிர்வாகிகளை அன்புமணி பனையூருக்கு கடத்தி சென்றுள்ளார்.
* பனையூரில் புதிய கட்சி அலுவலகம் தொடங்கியுள்ளேன். அங்கே வாருங்கள் என்று கூறி புதிய செல்போன் எண்ணையும் புதுப்பித்துக்கொள்ளும்படி கொடுத்ததும், இதுபோன்ற செயல்கள் கட்சியை அன்றே பிளவுப்படுத்துவதும், குழப்பத்தை ஏற்படுத்துவதும் போன்ற தலைமைக்கு கட்டுப்படாத செயலாகவே இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கருதுகிறது.
* ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததும், ஐயாவுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று வேண்டியதும் கட்சியை அவமதிக்கும் செயல் ஆகும்.
* அனுமதி பெறாமல் நடைபயணம் மேற்கொள்வதும் கபட நாடகம் தான்.
* அன்புமணி மைக்கை தூக்கிப் போட்டது, தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்களை கூட்டத்திற்கு வராமல் தடுத்தது தவறான செயல் ஆகும்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications