Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடியை விடாத 12 ஆண்டு செம்மண் குவாரி வழக்கு.. இன்று விசாரணை! கௌதம சிகாமணி மனு என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு இன்று விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2006 - 2011 இடையே நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராகவும் கனிமவளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர் பொன்முடி. திமுகவின் மூத்த அமைச்சர்களுல் ஒருவரான இவர், தற்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் முறைகேடாக செம்மண் குவாரியை ஏலம் எடுத்ததாக புகார் எழுந்தது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக செம்மண்ணை அந்த செம்மண் குவாரியில் எடுத்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

Sand Quarry case against Minister Ponmudi is hearing in Villupuram District Court today

இந்த புகார் தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணி, கோபிநாத், ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், கோதகுமார், லோகநாதன், சதானந்தன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 67 பேர் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்கி நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களில் அப்போது இருந்த உயர் அதிகாரிகள் தங்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன் உள்ளிட்ட 9 பேர் தெரிவித்தன்ர். இந்த முறைகேடு பற்றி தங்களுக்கு எதுவுமே தெரியாது எனவும் அவர்கள் பிறழ் சாட்சி அளித்து உள்ளனர்.

தொடர்ந்து வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணை காலகட்டத்திலேயே லோகநாதன் இறந்துவிட்டாா். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 4 பேரும் ஆஜராகவில்லை. ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய 3 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 4 பேர் ஆஜராகாத காரணத்தை அவா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

அதேபோன்று இந்த வழக்கு தொடா்பான முக்கிய ஆவணங்களை விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து நீதிமன்றத்துக்கு எடுத்து வரக்கோரி பொன்முடி மகன் கெளதம சிகாமணி, ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோா் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 4 ஆம் தேதி இவர்களின் மனு விசாரணைக்கு வந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+