இறந்த தந்தையின் உடல் முன்பு தாலி கட்டி கல்யாணம்.. கதறி கதறி அழுத அலெக்சாண்டர்.. நெகிழ்ச்சி தருணம்!
Recommended Video
விழுப்புரம்: அன்பான அப்பா உயிரோடு இல்லை.. ஆனால் அவரது உடலிடம் ஆசிர்வாதம் பெற்று காதலியை ஆசிரியர் ஒருவர் கல்யாணம் செய்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி. இவருடைய மகன் அலெக்சாண்டர். 27 வயதாகிறது. மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார்.
இவர், தன் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஜெகதீஸ்வரி என்ற டீச்சரை விரும்பினார். இருவரும் ரொம்ப நாளாக காதலித்து வந்தனர். விஷயத்தை வீட்டில் சொல்லவும் அதற்கு இரு தரப்பிலும் சம்மதமும் சொன்னார்கள்.

கல்யாணம்
அலெக்சாண்டருக்கும், ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாசம் 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் கல்யாணம் என்று முடிவானது. திண்டிவனம் பக்கத்திலேயே ஒரு கல்யாண மண்டபத்தில் ரிசப்ஷன் என்றும் பேசி முடித்தார்கள். இதற்காக பத்திரிகை அச்சிடப்பட்டு, ஊர் முழுக்க தரப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தெய்வமணி நேற்று திடீரென இறந்துவிட்டார்.

நொறுங்கி போனார்
அடுத்த மாசம் கல்யாணம் உள்ள நிலையில் தெய்வமணி இறந்தது இரு குடும்பத்துக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் தந்தது. இதில் ரொம்பவே நொறுங்கி போனவர் அலெக்சாண்டர்தான். அப்பா என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். ஊர் முழுக்க பார்த்தாலும், கல்யாணத்தை பார்க்க அப்பா இருக்க மாட்டார் என்பதை நினைத்து தேம்பி தேம்பி அழுதார் அலெக்சாண்டர்.

ஜெகதீஸ்வரி
அதற்காக தந்தையின் உடல் முன்பு ஜெகதீஸ்வரி கழுத்தில் தாலி கட்ட போறேன் என்று வீட்டில் சொன்னார். இதை கேட்டு முதலில் அதிர்ந்த குடும்பத்தார், ஜெகதீஸ்வரி வீட்டாரிடம் எடுத்து சொல்லி சம்மதம் கேட்டார்கள். சூழலையும், மகனின் பாசத்தையும் உணர்ந்த அவர்களும் இதற்கு ஒப்புதல் தந்தனர்.

தாலி கட்டினார்
இதையடுத்து ஜெகதீஸ்வரி குடும்பத்தினர், அவரது சொந்தக்காரர்கள் சிங்கனூருக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் தெய்வமணியின் கைகளில் தாலியை வைத்து ஆசிர்வாதம் பெற்ற அலெக்சாண்டர், ஜெகதீஸ்வரியின் கழுத்தில் கட்டினார். அப்போது கதறி கதறி அழுதார் அலெக்சாண்டர். கூடிநின்ற எல்லோருமே இதை பார்த்து அழுதனர். தந்தை இறந்த பிறகும் அவரது உடலிடம் ஆசிர்வாதம் பெற்று நடந்த இந்த கல்யாணம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை தந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications