விழுப்புரம் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை எப்படி நடந்தது?.. மாநில மகளிர் ஆணையம் சொல்வது என்ன?
ஆசிரமத்தில் வன்கொடுமை எப்படி நடந்தது என்பது குறித்து மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை எப்படி நடந்தது என்பது குறித்து மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஜவாஹிருல்லா என்பவர் காணாமல் போனார். அவரை மீட்டு தரும்படி அவருடைய மருமகன் சலீம்கான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரமத்தில் போலீஸார், வருவாய் துறை, சமூகநலன் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருந்தன.

போதை ஊசி
ஆசிரமத்தில் இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. பெண்களுக்கு போதை ஊசி போடப்பட்டு அவர்கள் மயங்கியவுடன் பாலியல் அக்கிரமங்கள் நடந்துள்ளன. ஒருவேளை எந்த பெண்ணாவது பாலியல் இச்சைக்கு இணங்காவிட்டால் அவர்களை இருட்டு அறையில் அடைத்துவிடுவார்களாம்.

குரங்குகளை விட்டு கடிக்க விடுவர்
அங்கு நிறைய குரங்குகளை விட்டு கடிக்க விடுவார்களாம். இப்படிப்பட்ட கொடுமைகள் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி, அவரது மனைவி மரியா ஜீபின் , ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆசிரம நிர்வாகி ஜீபினின் பாலியல் வக்கிரமங்களுக்கு அவரது மனைவியும் உடந்தை என்பது வேதனையிலும் வேதனை.

விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஆசிரமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி நேரில் விசாரணை நடத்தினார்.

ஆசிரமத்தில் இருந்து மீட்பு
அப்போது பாதிக்கப்பட்டவர்களிடம் ஆசிரமத்தில் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நல்ல நிலையில் உள்ளவர்கள், மாவட்டத்தில் செயல்படும் மற்ற இல்லங்களில் மாற்றப்பட்டுள்ளனர்.

54 பெண்கள்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 38 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆசிரமத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்ட 2 பெண்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கூடுதலாக அரசு மனநலக் காப்பகங்களை அமைக்க பரிந்துரை செய்யப்படும். இந்த விசாரணை அறிக்கை சிபிசிஐடி விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்.

8 பேர் கைது
இதுவரை ஆசிரம உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் ஆணையம் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடமும் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என குமார் தெரிவித்தார். இதனிடையே ஜவாஹிருல்லாவின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இந்த வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜீபின் பேபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு விளக்கத்தை ஜீபினிடம் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜுபின் மற்றும் கேரளாவை சேர்ந்த மேலாளர் விஜி மோகன் மற்றும் தாஸ், விழுப்புரத்தை சேர்ந்த பூபாலன் தெலுங்கானாவைச் சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications