நைட் நேரம்.. பஸ்ஸில் தனியாக உட்கார்ந்திருந்த இளம்பெண்.. பக்கத்தில் சென்ற கண்டக்டர்.. இப்ப ஜெயிலில்!
பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் கண்டக்டர்
விழுப்புரம்: ஓடும் பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்டக்டரை கைது செய்துள்ளனர் போலீசார்..!
Recommended Video
நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் கண்டக்டர் மற்றும் டிரைவர்களால் சர்ச்சைகளும், பரபரப்புகளும் கூடி வருகின்றன.. குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வமேரி.. மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் குளச்சல் பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மீன் கூடைகளுடன் அரசு பஸ்சில் ஏறினார்..
அப்போது பஸ்சில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பஸ் கண்டக்டர் அவரை இறக்கிவிட்டார்... இதுதொடர்பாக வீடியோ சமூக சோஷியல் மீடியாவில் பரவி, சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது... இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்..

சஸ்பெண்ட்
அதேபோல வடசேரியில், நரிக்குறவர் தம்பதியினர் பஸ்ஸில் சண்டை போட்டு கொண்டதற்காக அவர்களையும் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார் அந்த பஸ்ஸின் கண்டக்டர்.. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.. இப்போது இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது..
விழுப்புரம் அருகிலுள்ளது கோனூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, சென்னையில் உள்ள ஒரு தனியார் காலேஜில் கணிதம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

விழுப்புரம்
நேற்று மாலை விழுப்புரம் புது ஸ்டாண்டிற்கு இவர் வந்துள்ளார்.. சொந்த ஊர் செல்வதற்காக விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு பஸ்ஸிலும் ஏறியுள்ளார்... பெரும்பாக்கம் என்ற இடத்திற்கு சென்றபோது, அந்த பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லாரும் இறங்கிவிட்டனர்.. மாணவி மட்டும் தனியாக பயணம் செய்துள்ளார். அப்போது மணி இரவு 7. 15 இருக்கும்.. மாணவி தனியாக உட்கார்ந்திருப்பதை கவனித்த கண்டக்டர் சிலம்பரசன், பஸ் ஓட்டுவதை விட்டுவிட்டு, மாணவியின் அருகில் வந்து உட்கார்ந்து பாலியல் தொல்லை தர ஆரம்பித்துள்ளார்..

மாணவி
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, கண்டக்டரின் அத்துமீறலை தட்டி கேட்டுள்ளார்.. இதனால் கண்டக்டருக்கும் மாணவிக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.. அந்த சமயத்தில் தன்னுடைய கணவருக்கு போன் போட்ட மாணவி, அங்கு நடக்கும் வாக்குவாதத்தையும் கேட்கும்படி செய்திருக்கிறார்.. மாணவி இறங்க வேண்டிய கோனூர் கிராமம் வந்தபிறகும் பஸ்ஸை நிறுத்தாமல், தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார் டிரைவர் அன்புச்செல்வன்...

மடக்கி பிடித்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, பஸ்ஸில் இருந்து குதித்துள்ளார்... அதற்குள் தகவலறிந்து வந்த கோனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பஸ்ஸை மடக்கிப்பிடித்து டிரைவர் மற்றும் கண்டக்டரை காணை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.. போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது... இதையடுத்து, கண்டக்டர் அன்புச்செல்வன், டிரைவர் சிலம்பரசன் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இறுதியில் சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர்.. அரசு பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications