சின்னி ஜெயந்த் மகனுக்கு ப்ரொமோஷன்.. விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆனார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்!
விழுப்புரம்: நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இன்று விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார். யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற ஸ்ருதன் ஜெய் நாராயணன் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பிறகு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக பணியாற்றினார்.

பின்னர் அவருக்கு தமிழ்நாட்டில் பணி ஒதுக்கப்பட்டது. ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
கடந்த சில நாட்களாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட ஊரக முகமை திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டார்.

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ், இன்று கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் ஏற்கனவே பணியாற்றிய திருப்பூர் மாவட்ட மக்கள், அவரை மிஸ் செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications