திண்டிவனம் அரசு பஸ் ஸ்டாண்டில் யார் பாருங்க.. அகற்றப்பட்ட கலைஞரின் பெயர்.. விழுப்புரம் கதர்கள் குஷி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம், கட்டிடப் பழுது மற்றும் இடநெருக்கடி காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. இது மிகப்பெரிய விவகாரமாக வெடித்து கிளம்பிய நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் இந்த விவகாரம் புகைந்து கொண்டிருக்கிறது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் கட்டப்படாததால், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழேயே தற்காலிகமாக பேருந்துகள் நின்று செல்லும் நிலை நீடித்தது.

இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், திண்டிவனம் தீர்த்தங்குளம் ஏரிப் பகுதியில் சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது..
திண்டிவனம் பஸ் ஸ்டாண்டு
இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு "முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்" என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு, அதற்கான பெயர் பலகைகளும் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டன.
ஆனால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அரசின் இந்த முடிவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திரா காந்தி பெயரில் இயங்கிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைப்பதன் மூலம், இந்திரா காந்தியின் பெயர் மறைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அந்த கட்சியின் தலைவர்களின் பெயர்களை நீக்குவது முறையல்ல என்றும், பழைய பெயரையே சூட்ட வேண்டும் என்றும் சிவி சண்முகம் வலியுறுத்தினார்.
விழுப்புரம் திமுக
மற்றொருபுறம் , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, திண்டிவனம் பஸ் ஸ்டாண்டுக்கு மீண்டும் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், புதிய பேருந்து நிலையத்திற்கு "இந்திரா காந்தி பேருந்து நிலையம்" என்று பெயரிட உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலைய முகப்பில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் பெயர் பலகைகள் உடனடியாக அகற்றப்பட்டு, புதிய பெயர் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழக காங்கிரஸ் குஷி
இதற்கு நன்றி தெரிவித்து இன்று செல்வபெருந்தகை ஒரு ட்வீட்டை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.. அதில், "முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பேருந்து நிலையம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இந்த பெயரில் ஆசைப்பட்டு வந்த பேருந்து நிலையம் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று தற்போது பெயர் மாற்றம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை மாற்ற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு சூட்ட வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்தேன்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
அதனை பரிசீலித்து நான் கேட்டதற்கு இணங்க, முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பேருந்து நிலையம் என திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு பெயர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார் செல்வபெருந்தகை.
ஆனாலும் இந்த முடிவு திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வைக்கப்பட்ட கலைஞர் பெயரை நீக்கிவிட்டு மீண்டும் இந்திரா காந்தி பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டிவனம் நகர மன்ற திமுக உறுப்பினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டு முன்பு உட்கார்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்..
பெயர் மாற்றம் - மோதல்
கலைஞரின் பெயரை நீக்கியது தவறு என முழக்கமிட்டனர். பிறகு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
பிப்ரவரி 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து வைக்க உள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பெயர் மாற்ற மோதல் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... ஏற்கனவே சீட் விவகாரம், ஆட்சியில் பங்கு என்று திமுக கூட்டணிக்குள் சலசலசப்பு உள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் மோதல் முற்றி கொண்டே செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications