நம்பிக்கை துரோகி..மோடியின் முதுகில் குத்திய எடப்பாடி! அட்டாக்கை ஆரம்பித்த அண்ணாமலை..பரபர பாஜக-அதிமுக
விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் எனவும், நம்பிக்கை வைத்த பிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் எடப்பாடி என விக்கிரவாண்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார்.

குறிப்பாக,"பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார். அண்ணாமலை மெத்தப்படித்தவர்; மிகப்பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி இருக்கிறது என்றார்.
மேலும்," நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை விட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார். அண்ணாமலை வந்த பின்பு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போல ஒரு மாயதோற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு திட்டத்தையும் பெற்று தராமல் வாயிலே வடை சுட்டு கொண்டிருக்கிறார் அண்ணாமலை என விமர்சித்திருந்தார்
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம்பிக்கை வைத்த பிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் எடப்பாடி என விக்கிரவாண்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அதிமுக கோட்டை எனக்கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. சுயலாபத்திற்காக, அதிகார வெற்றிக்காக அதிமுகவை அழித்து கொண்டிருக்கிறார்கள்.
நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கே பொருந்தும். நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி பக்கத்தில் அமர வைத்தார்; நம்பிக்கை வைத்த பிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் எடப்பாடி. அக்கரைக்கு இக்கரை பச்சை என நினைத்து பாஜகவை வேண்டாமென ஒதுக்கிய எடப்பாடி, நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழந்தார்.
ஈரோடு இடைத்தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது ஈரோடு என்னுடையை கோட்டை; அதனால் நாங்கள் அங்கு போட்டியிடுகிறோம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் அவரிடம் கூறுங்கள் என என்னிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார். தோல்வியடைவோம் என தெரிந்தும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது ஏன்?. தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு புதுப் புது காரணங்கள் கண்டிபிடித்து கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட்டமே வருவதில்லை. முன்பு இருந்ததுபோல் இல்லை. அதிமுக சிறிது சிறிதாக கரையத் தொடங்கிவிட்டது. தன் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. தலைமை சரியில்லாததால் அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 2019-ம் ஆண்டு முதல் தொடர் தோல்வியை சந்திக்கிறது. அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை. என கட்சியை பற்றி அவர் பேசும் போது,, நான் அவர் கட்சி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. பாஜகவுக்கும், எனக்கும் பாடம் எடுக்கும் அருகதை எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications