விழுப்புரம் மாவட்டம் முழுக்க 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்.. தனியார் பார்களும் இயங்காது!
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக 4 நாட்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 64 வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 35 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே தான் மும்முனை போட்டி நிகழ்கிறது. பிரதான கட்சிகள் தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் ஜூலை 8, 9, 10 மற்றும் ஜூலை 13 ஆகிய 4 நாட்களுக்கு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “08.07.2024 காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
08.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications