விழுப்புரத்தில் ரெயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றம்.. 160 படுக்கைகள் தயார்!
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் 10 ரயில் பெட்டிகள் கொரோனா வாா்டாக மாற்றம் செய்யப்பட்டு, சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதியாக, நாடு முழுவதிலும் ரயில் பெட்டிகள் கொரோனா சிறப்பு வாா்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.


தமிழகத்தில் சென்னை, பெரம்பூா், திருச்சி பொன்மலை ஆகிய இடங்களில் ரயில் பெட்டிகளை கொரோனா வாா்டாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு ரயிலில் உள்ள 10 பெட்டிகளிலும், சுகாதார குழுவினர் மூலம் நோயாளிகள் படுக்கை, மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெட்டியிலும் இருக்கும் 4 கழிப்பறைகளில் 2 குளியல் அறைகளாகவும், 2 கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு கேபினுக்கும் திரைச்சீலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜன்னல்களில் கொசு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்புக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிமைப்படுத்தும் பகுதியிலும் குப்பைத் தொட்டிகள், தண்ணீா் பாட்டில்கள் வைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ஒவ்வொரு பெட்டியிலும் 16 பேர் தங்குவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமுள்ள 10 பெட்டிகளில் 160 பேர் வரை தங்கி சிகிச்சை பெறலாம். இந்த பெட்டிகளில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கும் ரயில் பெட்டிகளை, கொரோனா சிறப்பு வார்டாக மாற்றி அனுப்பும் பணி விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications