உதிக்குமா சூரியன்..பழுக்குமா மாம்பழம்? ‘மைக்’ உடன் சீமான்! நாளை ஓயும் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரம்
விழுப்புரம்: ஜூலை பத்தாம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் நிலையில், ஜூலை எட்டாம் தேதியான நாளை விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிவடைந்த கையோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்போடு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் எம்எல்ஏ மரணமடைந்ததால் மீண்டும் திமுகவே அந்த தொகுதியில் போட்டியிடுகிறது.

திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருக்கிறது அதிமுக.
பணபலம், ஆளுங்கட்சி அராஜகம் உள்ளிட்டவற்றால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என அறிவித்தார் ராமதாஸ். அந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட அபிநயாவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதை அடுத்து விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் கால இடைவெளியே இருக்கும் நிலையில் 8ஆம் தேதி அதாவது நாளை தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற இருக்கிறது.
இதைடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அன்புமணி ராமதாஸ், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக இளைஞரணி தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்று வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் நாளை மாலை 6:00 மணியுடன் விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. கடந்த 14ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் 24-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மொத்தம் 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தற்போதைய சூழலில் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் களம் காண்கின்றனர். அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா ஆகியோர் இடையே தான் போட்டி நிலவுகிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய இருக்கும் நிலையில் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ,வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மற்றும் வாக்காளர் அல்லாதோர் ஆறு மணிக்கு மேல் தொகுதிகளில் இருக்கக் கூடாது.
அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.. மேலும் 6 மணிக்கு மேல் சமூக ஊடகங்கள், துண்டு பிரச்சாரம் என எந்த வகையான ஊடகங்கள் மூலமாகவும் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இறுதி நேரத்தில் பண பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதி மீறல்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்திருக்கிறது. மேலும், துணை ராணுவம், காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications