6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்
விழுப்புரம்: வரும் சட்டசபை தேர்தலில் தப்பித் தவறி என்டிஏ கூட்டணி வென்றால், தமிழகத்தின் முதல்வராக அண்ணாமலை அல்லது எச்.ராஜா ஆகியோரில் ஒருவர் பதவியேற்கக் கூடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன், அதிமுக சார்பில் கே. விஜயா, தவெக சார்பில் மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணனை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிதான் அமோக வெற்றி பெற போகிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஒரு பேச்சுக்கு தப்பித் தவறி இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி வென்றால், தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்க மாட்டார். பாஜகவை சேர்ந்த அண்ணாமலை அல்லது எச். ராஜா ஆகியவர்களில் ஒருவர்தான் முதல்வராவார்.
தற்போது எடப்பாடி தலைமையில் இருப்பது மோடி இயக்கும் அதிமுக. புதுவையில் அதிமுகவுக்கு 2 சீட் என கரைந்ததை போல தமிழகத்திலும் பாஜகவால் அதிமுக கரையும் சூழல் உருவாகும் என தெரிவித்தார்.
அண்ணாமலையும், எச்.ராஜாவும் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு அவர்கள் வெற்றி பெற்றால் முதல்வராக தொடர்வார். இதற்காக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் வென்ற தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வர். அப்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். அந்த இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிடுவார்கள்.
கூட்டணி என்றாலும் பீகார், புதுவையை போல் மாநில கட்சியை ஓரங்கட்டிவிட்டு பாஜக சவாரி செய்யும் என்பதைத்தான் திருமாவளவன் சுட்டிக் காட்டியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் (குறிப்பாக திருவாரூர் மற்றும் மதுரையில்) இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது மிகவும் காரசாரமாக விமர்சித்தார்:
"தமிழ்நாடு vs டெல்லி": இந்தத் தேர்தல் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையிலான போட்டி அல்ல; இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் (பா.ஜ.க.) இடையிலான போர் என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதிமுக ஒரு 'முகமூடி': "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. என்பது வெறும் முகமூடிதான்; அதன் பின்னால் இருந்து இயக்குவது பா.ஜ.க.தான். ஒருவேளை இந்தக் கூட்டணி வென்றால், அது எடப்பாடியின் ஆட்சியாக இருக்காது, அமித் ஷாவின் ஆட்சியாகத்தான் இருக்கும்" என்பது ஸ்டாலினின் வாதம்.
முதல்வர் நாற்காலி மிரட்டல்: பா.ஜ.க.வின் தயவின்றி அ.தி.மு.க.வால் எதையும் செய்ய முடியாது என்றும், இறுதியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவரையோ அல்லது அவர்களுக்கு அடிபணிந்து நடப்பவரையோதான் அவர்கள் முதல்வராக்குவார்கள் என்றும் அவர் எச்சரித்து வருகிறார்.
தொல். திருமாவளவன் கருத்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை "சனாதனக் கூட்டணி" என்று விமர்சிக்கிறார்.
ஜெயலலிதா பாணி இல்லை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பா.ஜ.க.வை ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் காலூன்ற விடவில்லை. ஆனால், இன்றைய அ.தி.மு.க. தலைமை தனது சுயநலத்திற்காகப் பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டது என்று திண்டுக்கல் பிரசாரத்தில் அவர் பேசினார்.
அதிகாரப் பகிர்வு: பா.ஜ.க.வின் நோக்கம் அ.தி.மு.க.வைத் துணைக்கு வைத்துக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். எனவே, தேர்தல் வெற்றிக்குப் பின் அ.தி.மு.க.வின் பிடி தளர்ந்து, பா.ஜ.க.வே அதிகாரத்தை முழுமையாகத் தன் வசம் எடுத்துக் கொள்ளும் என்று திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார்.
பா.ஜ.க. தரப்பில் "கூட்டு ஆட்சி" என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே போன்றோர், "தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமையும்" என்று கூறியது, அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்ற பிம்பத்தைச் சற்றுச் சிதைத்துள்ளது. திருச்சி, மதுராந்தகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி கூட முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார் என்றோ அதிமுக ஆட்சி அமைக்கும் என்றோ குறிப்பிடவில்லை.
தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் பா.ஜ.க.விற்கு முக்கியப் பதவிகள் மற்றும் துணை முதல்வர் பதவி போன்றவை வழங்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன.
"பா.ஜ.க.விற்கு வாக்களிக்க விரும்பாத மக்கள், அ.தி.மு.க.விற்கு வாக்களித்தாலும் அது பா.ஜ.க.விற்கே செல்லும்" என்ற அச்சத்தை வாக்காளர்கள் மத்தியில் உருவாக்குவதே ஸ்டாலின் மற்றும் திருமாவளவனின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, "நாங்கள்தான் பெரிய கட்சி, முதல்வராக நான்தான் இருப்பேன்" எனத் தனது பிரசாரங்களில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications