உதயநிதி ஆட்சியில் மாணவிகளுக்கு "பைக்" வழங்கும் காலம் வரும்.. அடித்து சொல்லும் அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் ஆட்சியில் கட்டாயமாக மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் காலம் வரும். ஏனென்றால் இளைஞர்களை பற்றி நல்லா தெரிந்துகொண்டு அதற்கேற்ற திட்டங்களை செயல்படுத்தி கொடுப்பவர் உதயநிதி ஸ்டாலின் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ள்ளார்.
அமைச்சர் பொன்முடி இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் போது, உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வரும் போது, மாணவிகளுக்கு பைக் வழங்கும் காலம் வரும் என்று பேசியிருக்கிறார். பொன்முடி பேசும் போது, "எல்லாரும் நடந்து போய் படித்த காலம் போய் இப்போது சைக்கிள் சென்று படிக்கிற காலம் வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் நாள் கழித்தால் என்ன ஆகும்? சைக்கிள் வேணாம் எங்களுக்கு பைக் வேண்டும் என்று கேட்பீர்கள்.

அது தான் காலத்தின் வளர்ச்சி. வரும்மா.. கண்டிப்பாக வரும்.. நிச்சயமாக வரும். உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் ஆட்சியில் கட்டாயமாக மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் காலம் வரும். ஏனென்றால் இளைஞர்களை பற்றி நல்லா தெரிந்துகொண்டு அதற்கேற்ற திட்டங்களை செயல்படுத்தி கொடுப்பவர் உதயநிதி ஸ்டாலின்" என்று கூறியுள்ளார். அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சு அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
ஏனெனில், திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான செல்வாக்கு உள்ள தலைவராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார். திமுக இளைஞரணி பொதுச்செயலாளராக இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சியினர் மத்தியிலும் செல்வக்கு உள்ள தலைவராக உள்ளார். கட்சியில் மட்டுமல்ல ஆட்சியிலுமே முக்கியமான பொறுப்பில் இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மட்டும் இன்றி சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட முதல்வரை போல் எல்லா துறைகளிலும் சம்பந்தப்பட்ட முக்கியமான துறையாகும். மிக முக்கிய துறையை உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைத்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே தான் உதயநிதி துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு மேல், அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். அதற்கு முன்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலம் என்ற பேச்சும் அடிபோடுகிறது. கட்சியில் முக்கிய பொறுப்பை வகிக்கும் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் வரும்கால தலைவராகவும் முதல்வராகவும் இருப்பார் என்று அக்கட்சியினர் இப்போதே பேசி வருகிறார்கள்.
பல மூத்த அமைச்சர்களும் இவ்வாறு சமீப காலமாக அதிகம் பேசுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தான் அமைச்சர் பொன்முடி இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் போது, உதயநிதி முதல்வராக வரும் போது, மாணவிகளுக்கு பைக் வழங்கும் காலம் வரும் என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications