சாராய சர்ச்சை.. திமுக பெண் கவுன்சிலர் கணவர் மரூர் ராஜா சிக்கியது எப்படி? பாய்ந்தது குண்டர் சட்டம்
விழுப்புரம் : விஷச்சாராயம் குடித்து மரக்காணத்தில் ஏராளமானோர் இறந்த நிலையில், சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் இறங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் சாராய வேட்டையை போலீசார் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் வீட்டிலேயே சாராயம் தயாரித்து விற்ற திண்டிவனம் தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் மரூர் ராஜா என்கிற ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி இரவு விஷசாராயம் விற்கப்பட்டிருக்கிறது. மலிவு விலையில் விற்கப்பட்ட இந்த விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தனர். இதேபோல் செங்கல் பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் பகுதியிலும் இதேபோன்று விஷ சாராயம் குடித்தவர்கள் மயங்கி விழுந்தனர்.

இந்த இரு சம்பவங்களிலும் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையடுத்து தமிழக முழுவதும் சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் இறங்கி உள்ளனர். சாராயம் விற்றதாக பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களிடம் இருந்த ஏராளமான சாராய கேன்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், கடந்த மாதம் 18-ந்தேதி திண்டிவனம் நத்தமேடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த காருக்குள் ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்தது.

இதையடுத்து காரில் வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் திண்டிவனம் நத்தமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் மரூர் ராஜா என்கிற ராஜா (வயது 38) என்பதும், இவருடைய மனைவி ரம்யா திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
மேலும் மரூர் ராஜா, தனது வீட்டிலேயே சாராயத்தை தயாரித்து அதனை பாக்கெட்டுகளில் அடைத்து திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றபோது போலீசாரிடம் சிக்கியது விசாரணைக்கு பின்னர் தெரியவந்தது. இதையடுத்து மரூர் ராஜாவை போலீசார் கைது செய்து திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தார்கள்.

இந்த சூழலில் மரூர் ராஜா மீது சாராய விற்பனை, கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் இருக்கிற நிலையில் அவர் தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளாராம். அவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின்பேரில் நேற்று மரூர் ராஜா குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications