பேரம் பேசியதில் தகராறு.. இளைஞர்களை வெளுத்துக் கட்டிய திருநங்கைகள்.. விழுப்புரத்தில் பகீர் சம்பவம்
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் மூன்று திருநங்கைகள் ஒன்று சேர்ந்து இரண்டு இளைஞர்களைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பேரம் பேசியதில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளதையடுத்து, திருநங்கைகள் இளைஞர்களை வெளுத்துக் கட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் நடமாடும் திருநங்கைகள் பயணிகளுக்குத் தொந்தரவு தருவதாகவும், தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருச்சி, கோயம்புத்தூர் மதுரை போன்ற இடங்களிலிருந்து வரும் பயணிகளிடம் திருநங்கைகள் அத்துமீறுவதும், சிலர் திருநங்கைகளிடம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி இருந்து வருகிறது.

திருநங்களைகள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களுடன் செல்பவர்களிடம் பணம் மற்றும் செல்போன்கள் பறிப்புப் சம்பவங்கள் நிகழ்கின்றன. வெளியில் சொன்னால் அவமானம் என எண்ணி சிலர் போலீஸில் புகார் தெரிவிக்காமல் செல்கின்றனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திருநங்கைகள் தொடர்ந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடமாடி வருவதோடு பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவங்கள் குறித்து காவல் துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் ஓரிரு நாட்கள் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு பயணிகளைத துன்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரத்தில் மூன்று திருநங்கைகள் சேர்ந்து இளைஞர்களை வெளுத்துக் கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இருக்கும் சிசிடிவி காட்சியில், இரண்டு இளைஞர்கள் நடந்து செல்கின்றனர். அங்கு நடந்து செல்லும் திருநங்கையை அழைத்து பேரம் பேசுகின்றனர். அப்போது, அவர்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்த இரண்டு இளைஞர்களையும் பிடித்து, மூன்று திருநங்கைகள் தாக்குகின்றனர். அப்போது அருகில் உள்ள கடையில் இருந்த கட்டையை எடுத்து அடிக்கச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் திருநங்களைகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதால் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications