இனி நோ லுக்கிங் பேக்.. முடிவோடு தான் வந்துருக்கேன்.. தவெக மாநாட்டில் விஜய் அதிரடி
விக்கிரவாண்டி: தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர்கள் தங்களின் கொள்கை, கோட்டுபாடுகள், வழிகாட்டிகள் யார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அதில் தான் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பதை விஜய் கூறியிருக்கிறார்.
நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் விஜய், மகத்தான அரசியல் என்றால் அது மக்களுக்கான அரசியல் தான். சோறு சாப்பிட்டால் தான் பசியாறும். சோறு என்று சொன்னால் பசியாறாது. மீன் பிடித்து கொடுக்கக் கூடாது. அது தவறு.

மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும் என சிலர் சொல்வார்கள். நாங்கள் வேறு மாதிரி. முடிந்தவர்கள் மீன் பிடிக்கட்டும், முடியாதவர்களுக்கு நாங்கள் பிடித்து கொடுத்து வாழ வைப்போம். மக்களின் நன்மைக்காக எதுவும் தவறில்லை. அரசியல் தெளிவு தான் எங்கள் நிர்வாக செயல்முறை. எங்களின் அரசியல் கொள்கை எதார்த்தமானது. மாற்று அரசியல், மாற்று சக்தி என்று எல்லாம் நான் சொல்ல மாட்டேன்.
எக்ஸ்ட்ரா லக்கேஜா எல்லாம் இருக்க நான் வரலை ப்ரோ. எக்ஸ்ட்ரா வேலையால், நாட்டுக்கு கேடு விளைவிக்கும் வேலை செய்யும் ஏமாற்று இயக்கங்களுக்கு எதிராக உங்களில் ஒருவராக பணியாற்றுவது தான் எங்கள் டார்கெட். ஒரு முடிவோட தான் வந்திருக்கேன். இனி வந்தப் பாதையை திரும்பி எல்லாம் பார்க்க மாட்டேன். இது நாங்கள் எடுத்த முடிவு.
சமூகவலைதளங்களில் கம்பு சுத்த வந்த கூட்டம் இல்லை. மக்களின் உரிமைக்காக அரசியல் வாள் ஏந்தி நிற்கும் கூட்டம். அதிகாரத்தை கையில் எடுத்து, மிரட்ட வந்த கூட்டம் இல்லை. இந்த ஆபாசம், அள்ளு சிள்ளு, பயாஸ்கோப் காட்டுவது, ஏ டீம், பி டீம் என்று சொல்லி பயமுறித்திவிடலாம் என நினைத்துவிட வேண்டாம். இங்கு வந்தவர்கள் மட்டுமல்ல, வர முடியாமல் இருக்கிற கோடிக்கணக்கான மக்கள் நம் வகையறா.
2026 தேர்தல் ஆணையம் போருக்கான நாளை குறிக்கும். அந்த நாளில் மக்கள் தவெக சின்னத்துக்காக மக்கள் வாக்களிப்பார்கள். இங்கு ஒரு கூட்டம் ஒரே பாட்டை நீண்ட காலமான ஒரே பாட்டு பாடுகிறார்கள். யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரே மாதிரியான சாயம் பூசி வருகிறார்கள். இந்த பூச்சாண்டி காட்டி, திரைமறைவில் டீலிங் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் பாசிசிம் என்றால் நீங்கள் பாயசமா. நீங்களும் அவர்களுக்கு சளைக்காதவர்கள். திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகிறார்கள். இனி எவ்வளவு மோடி மஸ்தான் வேலை செய்தாலும் வேலைக்கு ஆவாது. எங்கள் தவெகவுக்கு நாங்கள் பூசிய நிறத்தை தவிர வேறு நிறத்தை பூச முடியாது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் எங்களின் கொள்கை. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்களிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications