விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல்.. விறுவிறுப்பாக நடந்து முடிந்த தேர்தல்.. 76% வாக்குப்பதிவு!
விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இன்று நடக்க உள்ளது.
Recommended Video
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இன்று நடந்தது. இதில் மொத்தம் 76% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இன்று நாடு முழுக்க பல்வேறு இடங்களில் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது.
மொத்தம் 51 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது.

காலியானது
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. விக்ரவாண்டியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்த கே. ராதாமணி மரணமடைந்ததால் அந்தத் தொகுதி காலியாக இருக்கிறது.

எப்படி தேர்தல்
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கே. ராதாமணி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மரணம் அடைந்ததை அடுத்து விக்கிரவாண்டியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடந்தது.

பலர் போட்டி
விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். இங்கு கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. திமுக - பாமக இடையில்தான் இங்கு கடுமையான வாக்குவாதம், வார்த்தை போர் மூண்டது.

பிரச்சாரம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்கள் இங்கு தீவிர பிரச்சாரம் செய்தனர். அதேபோல் அதிமுக சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக இங்கு பிரச்சாரம் செய்தனர்.

எத்தனை வாக்காளர்கள்
இங்கு மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 250 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக 7500 போலீசார் நியமிக்கப்பட்டனர்.

எவ்வளவு நேரம்
காலையில் இருந்து இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இதன் மூலம் 76% வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகி உள்ளது. இன்று நடந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications