கள்ளக்குறிச்சியில் ஆக்கிரமிப்புகளை இடித்த கிராம மக்கள்.. அரசு மருத்துவமனை முன்பு அதிரடியாக சம்பவம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த அரசு ஆஸ்பத்திரிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைத்திருந்தது. அதனை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள்பல முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களே அதிரடியாக கடைகளை இடித்து அகற்றினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருக்கிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளார்களாம். இதனால் அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தடைபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து முறையிட்டும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் கூறி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலைகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு-சேராப்பட்டு சாலையில் கிராம மக்கள் அதிரடியாக மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். சிலர் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சங்கராபுரம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் கடப்பாரையை கொண்டு கட்டிடத்தை இடித்த கிராம மக்ளையும் தடுத்து நிறுத்தி போலீசார் சமாதானப்படுத்தினார்கள். தொடர்ந்து 10 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications