ஓரினசேர்க்கை + 2 சிறுவர்கள் கொலை +டார்ச்சர்! 2 வருடம் கழித்து பழிக்கு பழி! அதிர்ந்து போன விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஓரினசேர்க்கை செய்து சிறுவர்களை கொலை செய்து வந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து கோட்டகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கியது 13 வயது சிறுவனின் கொலை. ஓரினச்சேர்க்கை செய்ய கட்டாயப்படுத்தி, அபிஷேக் என்ற இளைஞர் அந்த சிறுவனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குழப்பம்
முதலில் அந்த சிறுவனின் மரணத்தில் நிறைய குழப்பம் வந்தது. பின்னர் அந்த சிறுவனின் போன் ரெக்கார்டை சோதனை செய்ததில் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த கலைமணி (மீனவர்) மகன் அபினேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காணாமல் போன சிறுவன் கடைசியாக அபினேஷிடம் போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அபினேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணை
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தன. அந்த 13 வயது சிறுவனை, அபினேஷ் ஓரினச்சேர்க்கை செய்ய அழைத்து கொடுமை படுத்தி கொன்று புதைத்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு சிறுவன் (12 வயது) ஒருவனையும் ஓரின சேர்க்கை செய்து கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. சிறுவர்களை இப்படி கொல்லும் முன் அவர்களை அந்த அபினேஷ் டார்ச்சர் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அபினேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல்வேறு வழக்கு
வாகன திருட்டு, நகை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும் அவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறையில் இருந்து பெயிலில் வந்த அபினேஷ் கோட்டகுப்பம் பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதையடுத்துதான் திடீர் திருப்பமாக நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அபினேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். கோட்டகுப்பம்பகுதியில் அவர் வீட்டிற்கு அருகே உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

கொலை
தகவலறிந்து வந்த கோட்டகுப்பம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு சிறுவர்களின் கொலைக்கு காரணமாக இருந்த அபினேஷ் திடீர் கொலை செய்யப்பட்டது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த அபினேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications