காருக்குள்ளே யாரு? நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த போலீஸ் SP கார்! விழுப்புரத்தில் அதிர்ச்சி!
விழுப்புரம் மாவட்ட எஸ்பியின் கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து கருகியது
விழுப்புரம்: இரவு நேரத்தில் எஸ்.பி-யின் கார் தீப்பிடித்து எரிந்ததால், அந்த காரை ஓட்டி வந்த நபர் யார் என்று தெரியாமல் விழுப்புரம் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீ நாதா பணியாற்றி வருகிறார்.. இவருக்கு 2 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு விழுப்புரம்- சென்னை புறவழிச்சாலையில் முத்தம் பாளையம் என்ற இடத்தில் இவரது கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது..

விழுப்புரம்
இதனால் விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வீரர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்தனர்.. ஆனால், அதற்குள் அந்த கார் கொழுந்து விட்டு எரிந்து, சாம்பலாகி கருகிவிட்டது.. எனவே, அந்த வாகனத்தின் மீது தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து, தீயை அணைத்தனர்... பிறகு காருக்குள் சென்று பார்த்தபோது அதனுள் யாரும் இல்லாதது தெரியவந்தது.

கார்
எனவே, இந்த காரை ஓட்டி வந்த நபர் யார்? நடுரோட்டில் கார் எப்படி தீப்பற்றியது? என்று பல்வேறு கோணத்தில் தாலுக்கா போலீசார் விசாரணையை துவங்கினர்.. அப்போதுதான், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கார் திடீரென ரிப்பேர் ஆகிவிடவும், இன்னொரு கார் கூடுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.. விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ்காரர் தியாகராஜன்.. இவர்தான் மாவட்ட எஸ்பியின் கார் டிரைவராக உள்ளார். ஆனால், மணிகண்டன் என்ற மற்றொரு டிரைவர் நேற்றிரவு காரை ஓட்டி வந்துள்ளார்..

தியாகராஜன்
விழுப்புரம்-சென்னை புறவழிச்சாலை செஞ்சி ரோடு கூட்ரோட்டில் வந்தபோது, கார் இன்ஜினில் திடீரென புகை வந்துள்ளது.. அப்போது அவர்கள் காரில் இருந்து இறங்கிவிட்ட நிலையில்தான், கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.. எஸ்பி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை கஞ்சனூருக்கு தியாகராஜன்தான் எடுத்து சென்றார் என்பது தெரியவந்துள்ளது. தியாகராஜனுக்கு பதிலாக மணிகண்டன் என்பவர் இந்த காரை ஓட்டி வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

குழப்பம்
ஆனால் மாவட்ட எஸ்பியின் வாகனத்தை ஓட்டி வந்த நபர் யார் என்று முழுமையான தகவல் கிடைக்காமல் காவல்துறை வட்டாரங்களில் சற்று குழப்பத்தில் உள்ளனர்.. காவல்துறை உயர் அதிகாரி காரின் எடுத்து பயன்படுத்த காரணம் என்ன? என்பது தெரியாமல் காவல்துறையை சேர்ந்த பலர் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். நேற்றிரவு கார் தீப்பிடித்து எரிந்ததில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்து.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications