எண்ட் கேம்..நாளை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! உதிக்குமா சூரியன்? பழுக்குமா மாம்பழம்?
விழுப்புரம்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையும், 8.30க்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட இருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூன் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அந்த கட்சியின் விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்கு செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமார் 892 சதவீத வாக்குகளே பதிவாகின. 176 வாக்குச்சாவடிகளில் 42 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகவும் 3 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டன. இதனயடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
மொத்தமுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டது. 276 கட்டுப்பாட்டுக் கருவிகள், 276 விவிபேட் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தபட்டன. மொத்தம் 1135 தேர்தல் பணியாளர்களும் 3000 போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மேலும் 3000த்திற்கும் மேற்பட்ட மத்திய போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இன்றி வாக்குப் பதிவு நடைபெற்றது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 331 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இது 82.48 சதவீத வாக்குப் பதிவாகி இருந்தது. மொத்தம் 95 ஆயிரத்து 536 ஆண்களும், 99 ஆயிரத்து 944 பெண்களும், 15 மூன்றாம் பாலினத்தவர் வாக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபேட் கருவிகளும் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட இருக்கிறது.
இதற்காக 15 மேஜைகள் அமைக்கப்பட்டு 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஒரே சுற்றாக தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக இரண்டு மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை பலத்த சோதனைகளுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். தற்போதைய சூழலில் திமுக பாமக இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிகபட்சம் 11 மணிக்கெல்லாம் யார் விக்கிரவாண்டியின் எம்.எல்.ஏ என்பது தெரியவந்துவிடும்.
நாளை வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையும், 8.30க்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட இருக்கிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை பலத்த சோதனைகளுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். தற்போதைய சூழலில் திமுக பாமக இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிகபட்சம் 11 மணிக்கெல்லாம் யார் விக்கிரவாண்டியின் எம்.எல்.ஏ என்பது தெரியவந்துவிடும்.
-
ஜனாதிபதியிடம் விருது வாங்கியவர்.. சென்னையின் புதிய கமிஷனர்! யார் இந்த அபின் தினேஷ் மோதக்? -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications