இரட்டை இலை இல்லை.. ஆனால் மாம்பழம் இருக்கிறது.. ஓபிஎஸ் பேச்சு.. சட்டென திரும்பிப் பார்த்த அண்ணாமலை!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்டோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். நம்மிடம் இரட்டை இலை இல்லை என்றாலும் இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி இருக்கிறது எனப் பேசி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியில் உள்ளனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாமக வேட்பாளருக்கு ஆதரவாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்ஆகிய மூவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பிரசாரம் செய்ய நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "நம்மிடம் இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி சின்னம் நம்மிடம் இருக்கிறது. அனைத்து நிலையிலும் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் நிறைந்த ஆட்சியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "நானும், ஒ. பன்னீர்செல்வமும் இந்த கூட்டணியில் இருக்கிறோம். எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பயன்படுத்த பாமகவிற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேச வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இங்கே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் சாட்சியாக அமர்ந்திருக்கிறார்கள். எம்ஜிஆருக்கு எப்படி திண்டுக்கல் மந்திரச் சொல்லாக மாறியதோ அப்படி என்.டி.ஏ கூட்டணிக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மந்திரச்சொல்லாக மாறும். அதிமுக தொண்டர்கள் மாம்பழம் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள்" எனப் பேசினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications