விழுப்புரத்தில் அதிகாலையில்.. காதலனுடன் பைக்கில் சென்ற இளம் பெண்.. பின்னாடியே வந்த நபர் செய்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண், பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை, போலீஸ் என்று கூறி ஒருவர் வந்து மிரட்டல் தொனியில் பேசினாராம். பின்னர் காதலனை தாக்கி விரட்டி விட்டு இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றாராம். இந்த குற்றச்சாட்டின் பேரில் டிரைவர் ஒருவர் கைதாகி உள்ளார்.

பெண்கள் மட்டுல்ல இரவில் காதல் ஜோடிகள் தனியாக வெளியே சென்றால், சில நேரங்களில் தவறான நபர்களின் அத்துமீறல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடற்கரைகளில் தனியாக இருக்கும் காதல் ஜோடிகளை மிரட்டி தவறாக நடந்து கொள்ள முயல்வது, மலைப்பிரதேசத்தில் தனியாக சந்திக்கும் காதல் ஜோடிகளை போலீஸ் என்று மிரட்டி அத்துமீறுவது ஆங்காங்கே நடக்கிறது. அந்த வகையில் விழுப்புரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

What happened to the young woman who was riding a bike with her boyfriend in Villupuram

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த 20 வயதாகும் பெண் ஒருவர், பி.எஸ்சி. முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பஸ்சில் புறப்பட்டு நேற்று முன்தினம் அதிகாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார். பின்னர் அவர் அங்கு வந்த காதலனுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி அருகில் இருந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர், திடீரென அவர்கள் இருவரையும் வழிமறித்து, தான் போலீஸ் எனக்கூறி இந்த நேரத்தில் எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கு செல்கிறீர்கள் எனக்கேட்டு மிரட்டினாராம். மேலும் அவர், அப்பெண்ணின் காதலனை திட்டி, போலீஸ் போல் நடித்த அவர், திடீரென தாக்கி மிரட்டி அனுப்பிவிட்டாராம். பின்னர் அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அழைத்துச் சென்றுள்ளாராம். செல்லும் வழியிலேயே அந்த நபர், அப்பெண்ணிடம் பணம் பறித்து கொண்டதுடன் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். உடனே அப்பெண் கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வரும் விக்கிரவாண்டியை சேர்ந்த 36 வயதாகும் லாரன்ஸ் என்பவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைதான அவர் மீது சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செல்போன் திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+