உலுக்கிடுச்சே.. 41,009 "மாத்திரைகள்".. அதுவும் 8 டைப்.. விழுப்புரம் ஆசிரமத்தில் தோண்ட தோண்ட கிளம்புதே
விழுப்புரம் அருகே அன்பு ஜோதி என்ற ஆசிரமம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது
விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இது தொடர்பாக சட்டரீதியான வழக்கு விசாரணை ஒருபுறமும், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை மறுபுறமும் என கொந்தளித்து கிடக்கிறது.. தற்போது அந்த ஆசிரமம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி பதற வைத்து வருகிறது.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபன்பேபி... இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் "அன்பு ஜோதி" ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார்.
இந்த காப்பகத்தில் வீட்டிலிருந்த தன்னுடைய மாமனார் ஜாபருல்லாவை காணவில்லை என்று ஒருவர் ஹைகோர்ட் வரை சென்றார்.. அப்போதுதான், இந்த அன்புஜோதி ஆசிரமத்தின் வண்டவாளம் வெளியே தெரிய ஆரம்பித்தது.

சீரியஸ் கண்டிஷன்
போலீஸார் ஆசிரம விவகாரத்தை சீரியஸாக அணுகிஉள்ள நிலையில், அங்கு அரங்கேறிய கொடூரங்கள் ஒவ்வொன்றும் வெளியாகி பலரையும் பதற வைத்திருக்கிறது.. இங்குள்ள வயதானவர்களை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்துள்ளார்கள்.. மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தி உள்ளார்கள்.. ஆதரவற்றவர்கள் என்பதால், ஏகப்பட்ட கொடுமைகளை செய்திருக்கிறார்கள்.. பெண்களுக்கு பாலியல் கொடுமை தரப்பட்டுள்ளது.. அவர்கள் பராமரிக்கப்பட்டு வரும் நபர்களை ரூம்களில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர். இவர்களை கடித்து குதறுவதற்காகவே குரங்குகளை ஆசிரமத்தில் வளர்த்து வந்திருக்கிறார்கள்.

கல்பாக்கம்
இந்த ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதாக திடீரென குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த 10ம் தேதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் மீது கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையமும் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததை உறுதி செய்தனர்... பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், துன்புறுத்தலுக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட 16 பெண்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் கல்பாக்கம் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்.

மாயமோ மாயம்
மேலும், இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் போலீஸ் ஸ்டேஷனில் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. விழுப்புரம் மட்டுமின்றி சேலம், கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டங்களிலும் இவர்களின் போட்டோக்களை பொதுமக்கள் பார்வையில் ஒட்டப்பட்டு போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். ஆசிரம நிர்வாகி ஜூபன்பேபி, பெங்களூருவில் தன்னுடைய நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்திற்கு ஜாபருல்லா உள்ளிட்ட 53 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாக விசாரணையில் கூறியிருந்தார்.. ஆனால், ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 11 பேர் மட்டும் திடீரென காணாமல் போயுள்ளனர்.. அவர்கள் கதி என்ன என்பதே இதுவரை தெரியவில்லை...

இரும்பு சங்கிலிகள்
இந்த காப்பகத்தில் இருந்தவர்களுக்கு ரேஷன் அரிசியில்தான் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.. மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி ஆசிரமத்தில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டப்பட்ட சங்கிலிகள், அவர்களை தாக்குதலுக்கு பயன்படுத்திய தடிகள், கம்புகள் உள்ளிட்ட பொருட்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆசிரமத்திற்கு அருகே ரத்தக்கறை படிந்த பாய் ஒன்று கிடந்ததாம்.. அதை பார்த்து மொத்த பேருக்கும் தூக்கி வாரிப்போட்டுள்ளது.. 15 வருடங்களாக, லைசென்ஸ் எதுவுமே இல்லாமல் இந்த ஆசிரமத்தை நடத்தி வந்தது எப்படி? என்ற கேள்விதான் பலரையும் உலுக்கி எடுத்து வருகிறது.

ஆபாசம் கொடுமை
இந்நிலையில், ஆசிரமத்தில் 4 வருடங்களாக தங்கியிருந்த பெண்மணி ஒருவர் பகீர் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், "ஆசிரமத்தில் கொடுமை தாங்க முடியல.. அதனால், இந்த 4 வருடங்களில் 2 முறை ஆசிரமத்தில் இருந்து தப்பித்து வந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.. ஏற்கனவே, அன்பு ஜோதி ஆசிரமத்தில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியான நிலையில், இந்த பெண்ணின் வாக்குமூலமும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.. அத்துடன், மேலும் சில பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்களிடமும் விசாரித்த பிறகுதான், அதுகுறித்து முழு விபரம் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.

41,009 மாத்திரைகள்
இதனிடையே அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் அறிக்கை வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் 8 வகையான 41,009 மனநல மாத்திரைகள் ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் மாத்திரைகள் அவர்களுக்கு எப்படி கிடத்ததுதான் அடுத்த அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.. இந்த தகவல்களம் சிபிசிஐடி தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

போலி லெட்டர் சீல்
அரசு மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் மாத்திரைகள் ஆசிரமத்திற்கு சென்றது எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கூறியுள்ளார்... இதைதவிர, தமிழ்நாடு, கர்நாடக போலீசாரின் போலி லெட்டர் பேட் மற்றும் சீல்களை பயன்படுத்தி ஆசிரமவாசிகளை இடமாற்றம் செய்தது அம்பலமாகியுள்ளது... அன்புஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட நபர் பெங்களூரூவில் புதைக்கப்பட்டதாகவும் சிபிசிஐடி போலீசார் சொல்கிறார்கள்.. விரைவில் அனைத்து தகவல்களையும் போலீசார் அம்பலப்படுத்தக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications