பாமக, நாம் தமிழருக்கு என்ன சின்னம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பானையால் திமுகவுக்கு சிக்கல்! ஏன்?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கி உள்ளது. இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் ‛பானை' சின்னம் சுயேச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டார். இவர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை அதிமுக, தேமுதிக கட்சிகள் புறக்கணித்துள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் என்பது கடந்த 14ம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் கடந்த 21ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்தனர். திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்மனுவை தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனையின்போது இவர்கள் 3 பேர் உள்பட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
நேற்றுடன் வேட்புமனு வாபஸ் பெறும் நாள் முடிவடைந்தது. யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து 29 வேட்பாளர்களுடன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை அது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இதனால் வழக்கம்போல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா உதயசூரியன் சின்னத்தில் களமிறங்குகிறார்.
மாறாக நாம் தமிழர் கட்சி மற்றும் பாமகவுக்கு எந்த சின்னம் ஒதுக்கப்படுகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இரண்டும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ள நிலையில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கேட்டு கட்சி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அதனை ஏற்ற தேர்தல் ஆணையம் பாமக வேட்பாளர் சி அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது. அதேபோல் நாம் தமிழர் கட்சி லோக்சபா தேர்தலில் 8 சதவீதத்தை தாண்டி ஓட்டுகள் பெற்று அங்கீகரிக்கப்பட் கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது. இதுதொடர்பாக இன்னும் தேர்தல் ஆணையம் இறுதி அறிவிப்பை வெளியிடவில்லை.
இதனால் நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னம் அல்லது முந்தைய தேர்தல்களில் பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தில் எதில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை ஏற்று அதன் வேட்பாளர் அபிநயாவுக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூமலம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
மேலும் இந்த தேர்தலில் பானை சின்னத்தை நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டிருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் பானை சின்னம் சிவசக்தி என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பானை சின்னம் என்பது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதில் விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குள் தான் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை திமுகவினர் மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு பானை சின்னத்தில் ஓட்டு கேட்டனர். இந்த தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்த 2 மாதத்தில் பானை சின்னம் என்பது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளது என்பதால் திமுகவுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications