Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழுப்புரம் சத்யாவுக்கு 4 கள்ளக்காதல்.. கிணற்றடி டிராமா.. இவரும் ஒரு தாய்? ஐயய்யோ, போயிட்டியா அதிசயா

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டமே கதிகலங்கி போயிருக்கிறது. யாரிந்த பெண் சத்யா? என்ன நடந்தது? விசாரணையின் பிடியில் சத்யா சிக்கியிருக்க என்ன காரணம்?

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு காணாமல் போனதாக தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Villupuram Sankarapuram Mother

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது பூட்டை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பிரகாஷ்... இவர் ஒரு லாரி டிரைவர் ஆவார்.. மனைவி பெயர் சத்யா. இவர்களுக்கு ஆதவன் என்ற 13 வயது மகனும், அக்சையா, அதிசயா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இதில் அதிசயா அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.. நேற்று முன்தினம் சனிக்கிழமை ஸ்கூல் லீவு என்பதால், காலை 7 மணியளவில் வீட்டுக்கு பக்கத்தில் தன்னுடைய தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தாள் அதிசயா.. ஆனால், அதன் பிறகு அதிசயாவை காணவில்லை. இதனால் பதறிப்போன குடும்பத்தினர், குழந்தையை தேட ஆரம்பித்தனர்.. எங்கெங்கு தேடியும் அதிசயாவை காணவில்லை..

அதிசயா: இதனால் அதிசயாவின் அப்பா பிரகாஷ், சங்கராபுரம் போலீசுக்கு ஓடினார்.. மகளை காணவில்லை என்று புகார் தந்தார்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அதிசயாவை தேட துவங்கினார்.. ஒருவேளை கிணறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் குழந்தை தவறி விழுந்திருக்கலாமோ? என்ற சந்தேகத்தில், தீயணைப்பு துறையினருடன் இணைந்து தீவிரமாக குழந்தையை தேடினார்கள்.

ஆனால், அதிசயாவை தேடிய அதே நாளில், அதே கிராமத்தில் பிரசத்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.. பலத்த மழையும் கொட்டியது.. அதிசயா காணாமல் போனதால், எங்கு பார்த்தாலும் அழுகையும், அலறலுமாக கேட்டது.. இதனால் கிராம மக்களால் தேர் திருவிழாவை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது.

கிராம மக்கள்: ஒருபக்கம் தேர்திருவிழா, மறுபக்கம் பொளந்து கட்டும் மழை, கிராம மக்களின் அழுகைகளுக்கு நடுவே, போலீசாரின் தேடும் பலம் தீவிரமானது..மோப்பநாயை வரவழைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிசயாவை தேடினார்கள்.. கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதியும் நேரடியாக ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார். மேலும், 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ஒட்டுமொத்த பூட்டை கிராமமே போலீசாரின் விசாரணைக்குள் வந்தது..

அனைவரிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடைசியாக அதிசயாவின் அப்பா, அம்மாவிடம் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது. அப்போதுதான், சத்யா சிக்கினார்.

கள்ளத்தொடர்பு: சத்யாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.. அதுவும் ஒரே நேரத்தில், 4 பேருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.. இந்த 4 பேருமே அதே கிராமத்தை சேர்ந்தவர்கள்தானாம். இதில், ஒருவர் சம்பவத்தன்று தன்னை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். அவர்மீது சந்தேகமாக இருப்பதாக போலீசாரிடம் சத்யா சொன்னார்.

உடனே போலீசார் அந்த நபரின் அடையாளங்கள் என்ன? அன்றைய தினம், அவர் என்ன உடை அணிந்து வந்தார்? என்று கேட்டார்கள்.

அடையாளம்: இதையடுத்து, சத்யா சொன்ன அடையாளங்களை வைத்து, அங்கிருந்த சிசிடிவியில் ஆராய்ந்தனர்.. ஆனால், சத்யா சொன்னதுபோல அந்த அடையாளத்தில் யாருமே சிசிடிவியில் பதிவாகவில்லை... அதற்கு பதிலாக, தன்னுடைய மகள் அதிசயாவை, சத்யா கையோடு அழைத்து சென்றது கேமராவில் பதிவாகியிருந்தது. ஆனால், திரும்பி வரும்போது, மகள் இல்லாமல் தனியாக வந்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ந்த போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணையை சத்யாவிடம் துவங்கினார்கள்.. இதில், திணறிப்போன சத்யா, மொத்த உண்மையையும் போலீசாரிடம் போட்டுடைத்தார்.. இதையெல்லாம் கேட்டு அதிர்ந்துபோனது மாவட்ட காவல்துறை.

வாக்குமூலம்: சத்யா வாக்குமூலத்தில், "இதே ஊரில் உள்ள பல்வேறு நபர்களிடம், சுமார் ரூ.4 லட்சத்துக்கு மேல் நான் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடன் வாங்கிய விவரம் பற்றி என்னுடைய கணவருக்கோ, என்னுடைய குடும்பத்தினருக்கோ தெரியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பி கொடுக்க என்னால் முடியவில்லை. கடன் வாங்கியவர்களிடம், தான் கூறியிருந்த காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டது.

Villupuram Sankarapuram Mother

அதனால், குழந்தையை கொன்று விட்டால், கடன் கொடுத்தவர்கள் என் மீது அனுதாபப்படுவார்கள்.. கொஞ்ச நாளைக்கு கடனை கேட்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.. அதனால்தான், சம்பவத்தன்று என்னுடைய மகளை, நானே அரசம்பட்டு சாலையோரத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

நடித்து காட்டினார்: இதையடுத்து, போலீசார் சத்யாவை கைது செய்து, எப்படி மகளை கொன்றார் என்பதை நடித்து காட்ட சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றார்கள்.. கிணற்றடிக்கு சென்ற சத்யா, குழந்தையை தள்ளிவிட்டதை போலீசாருக்கு நடித்து காட்டினார்.. இப்போது தொடர் விசாரணை பிடியில் சத்யா சிக்கி உள்ளார்.

இந்த வாக்குமூலத்தை கேட்டு, பூட்டை கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.. மனைவிக்கு 4 கள்ளக்காதலர்கள், 4 லட்சம் ரூபாய் கடன், மகளை கிணற்றில் தள்ளி கொலை என பகீர் சம்பவங்களை கேட்டு, சத்யாவின் கணவர் அதற்கு மேல் அதிர்ச்சியில் உள்ளார்.. !!!

சத்யா நேற்று பூட்டை விஏஓ பிரபாகரனிடம் சரணடைந்தார்... மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக அவரிடத்திலும் வாக்குமூலம் அளித்தார். சீட்டு எடுத்த பணத்தின் தவணையை நீண்ட காலமாகவே சத்யா கட்டாமல் இருந்துள்ளார்.. இதனால் கடன் கொடுத்தவர்கள் உறுப்பினர்கள் வீட்டிற்கே வந்து பணம் கேட்டு அவமானப்படுத்திவிட்டார்களாம்.. இறப்பு வீட்டில் பணம் கேட்க யாரும் வர மாட்டார்கள் என எண்ணியே, தன் மகள் அதிசயாவை கொலை செய்ததாக சொல்கிறார் சத்யா

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+