Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்கிரவாண்டியில் "சிரித்த" ஜெயலலிதா.. அப்போ பாமகவை முந்திவிடுவாரா சீமான்? கெத்து காட்டும் திமுக

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓட்டுக்களை அள்ள போவது எந்த கட்சி என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் எழுந்துள்ளது.

ஜூலை 10-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற போகிறது.. லோக்சபா தேர்தல் முடிவுகள் தந்த தாக்கத்தினால், எப்படியும் ஆறு முனை போட்டி விக்கிரவாண்டியில் எழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Vikravandi Byelection 2024 Byelection 2024 PMK DMK 2024

சீமான்: அதிமுக, திமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக கட்சிகள் தேர்தலை சந்திக்கக்கூடும் என்றே கணிக்கப்பட்டது.. பாஜகவும் இந்த தேர்தலை சந்திக்க ஆசைப்பட்டு, இறுதியில் பாமகவுக்காக விட்டுக் கொடுத்தது. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சியும் கோதாவில் குதித்தது.

எதிர்பார்த்தபடியே அனைத்து கட்சிகைளையும் முந்திக்கொண்டு திமுக வேட்பாளரை அறிவித்தது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், இடைத்தேர்தல் போட்டியில்லை என்று அதிமுக அறிவித்துவிட்டது. தேர்தல் பரபரப்பைவிட, இதுதான் அதிக பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

சிவி சண்முகம்: விக்கிரவாண்டி தொகுதியில் தங்களது இருப்பை நிலைநிறுத்தக்கூடிய சான்ஸ் கிடைத்தும்கூட, மூத்த தலைவர் சிவி சண்முகம் போன்றவர்கள் விழுப்புரத்தில் இருந்தும்கூட, இடைத்தேர்தலை புறக்கணித்ததை அதிமுக தொண்டர்களே எதிர்பார்க்கவில்லை.. லோக்சபா தேர்தலில், நழுவவிட்டதை இந்த தேர்தலிலும் அதிமுக தவறவிட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகிறார்கள்.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் கை ஓங்கும் என்பதால் தான் தோல்வியைத் தவிர்க்க அதிமுக இத்தேர்தலை புறக்கணித்துள்ளதாக மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

பாமக: அதேசமயம், விக்கிரவாண்டியில் அதிமுகவின் வாக்குகள், எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், அதிமுகவின் வாக்குகள் பாமகவுக்கா? அல்லது நாம் தமிழர் கட்சிக்கா? என்ற கேள்வி கிளம்பியிருக்கிறது.

பாமகவை பொறுத்வரை, அதிமுக கூட்டணியில் தற்போது ஐக்கியமாகி உள்ளது.. இதனால், தங்களுக்கான ஆதரவை அதிமுகவிடம் பாமக உரிமையாகவே கேட்டுப் பெறக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.. ஒரே கூட்டணியில் உள்ளதால், திமுகவை வீழ்த்துவது மட்டுமே அதிமுக, பாமகவின் குறிக்கோளாக இருக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை..

அன்புமணி: அதனால்தான், பாமக தலைவர் அன்புமணி தன்னுடைய பிரச்சாரத்தில், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம்முடைய பொது எதிரி திமுக. ஒரு வாக்கு கூட திமுகவுக்கு விழக்கூடாது. அதனால், பாமகவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இதன் உச்சக்கட்டமாக பிரச்சார கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா போட்டோவும் வைத்து பரபரப்பை கூட்டியிருந்தார்கள்.

அதிமுக: "அதிமுக உருவானதே திமுகவை எதிர்ப்பதற்காகத்தானே? அதிமுக தற்போது தேர்தல் களத்தில் இல்லாதபோது, திமுகவுக்கு எதிராக பாமக தான் நிற்கிறது.. அதனால்தான், அதிமுகவினரிடம் ஆதரவு கேட்கிறோம்.. ஜெயலலிதாவை எல்லோருக்குமான தலைவராக தான் நாங்கள் பார்க்கிறோம்" என்று பாமக இதற்கான காரணத்தையும் முன்னிறுத்துகிறது.

ஆனால், நாம் தமிழர் கட்சியோ இதற்கு முற்றிலும் மாறுபடுகிறது.. இதுவரை 10 வருட நாம் தமிழர் கட்சி அரசியலில், திமுக அளவுக்கு அதிமுகவை சீமான் சாடியதில்லை.. திமுக தலைவர்கள் அளவுக்கு அதிமுக தலைவர்களை விமர்சித்ததில்லை.. எனவே, அதிமுகவுக்கான பின்னணி ஆதரவில் நாம் தமிழர் கட்சி செயல்படுவதாக எப்போதுமே ஒரு பேச்சு உண்டு.

தமிழ் தேசியம்: அதற்கேற்றவாறு விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் சீமான் பேசும்போது, "அதிமுக மற்றும் தேமுதிகவில் இருக்கும் அன்பு உறவுகளே, நம்முடைய பொது எதிரி திமுக தான். கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். அதனால், இம்முறை என்னை ஆதரியுங்கள்.. இது தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்குமான போட்டி" என்று வெளிப்படையாகவே சொன்னார்.. இத்தனைக்கும் அதிமுக கூட்டணியில் பாமக உள்ளது என்பது அறிந்தும் இப்படி ஓபனாகவே பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்தார்.

அதேபோல திமுக தரப்பிலோ, "நாங்கள் பாமக போல சாதியவாத, மதவாத கட்சி அல்ல. அதனால், திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும் அதிமுக தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகள் எங்களுக்கு தான் கிடைக்கும்" என்று திமுக அமைச்சர் வேலு வாக்கு சேகரிப்பது அதைவிட பரபரப்பை கூட்டி வருகிறது.

அதிமுக வாக்குகள்: ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலி சொல்லும்போது, "தேர்தல் புறக்கணிப்பு என்றால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது மட்டும் அர்த்தமில்லை.. யாருக்குமே ஆதரவு இல்லை என்றும்தான் அர்த்தம்.. வாக்களிப்பது அவரவர் உரிமை என்றாலும், இன்னொரு கட்சிக்கு ஆதரவாக அதிமுகவினர் செயல்பட மாட்டார்கள்.

ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அழைத்த பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட பாமகவுக்கு, அவரது போட்டோவை பயன்படுத்த உரிமையில்லை.. பாமக தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே ஜெயலலிதா போட்டோவை பயன்படுத்துகிறது. எங்களது உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு தந்ததற்கு நன்றி.. எனினும், அதிமுக தொண்டர்கள் மற்ற கட்சியின் பக்கம் சாய மாட்டார்கள்.. எப்போதும் போல போட்டி, திமுக- அதிமுகவுக்கும் மட்டும்தான்" என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

எதிர்பார்ப்பு: இப்படி அதிமுகவின் வாக்குகளை பாமகவும், நாம் தமிழர் கட்சியும், திமுகவும் மாறி மாறி சேகரித்து வரும்நிலையில், அதிமுகவின் வாக்குகள் யாருக்கு போக போகிறதென்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+