"பச்சைக்கிளி" டெல்லி பக்கம் பறந்துடுச்சே.. மிஸ் பண்ணிட்டாரா எடப்பாடி பழனிசாமி.. ஸ்கோர் செய்கிறதா பாஜக
விழுப்புரம்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் முரளி என்கிற ரகுராமன், "பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்..
திண்டிவனம் அருகே கடந்த 5-ம் தேதி ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடத்திவைத்தார்...

இந்த திருமணத்தில் அந்த அறக்கட்டளையின் தலைவரும், மாவட்ட புரட்சித்தலைவி பேரவைச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவருமான முரளி என்கிற ரகுராமன் கலந்து கொண்டார்.
கட்சி கட்டுப்பாடு: அறக்கட்டளை நிகழ்ச்சிகள் அனைத்தையும், தன்னுடைய மகனுடன் இணைந்து செய்திருந்தார்.. இதனால், இந்த கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சொல்லி, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து, இன்று விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு வந்த முரளி என்கிற ரகுராமன், தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை வங்கியின் பொது மேலாளர் ரவிச்சந்திரனிடம் வழங்கினார்.
கட்சி கொடி: இதற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார்.. அப்போது, "என் மகன் நடத்திய 39 ஜோடிகளின் திருமணத்துக்கு நான் தந்தை என்ற முறையிலும், அறக்கட்டளையின் சார்பிலும் தான் சென்றேன். எந்த இடத்திலும் பாஜக கொடியை நாங்கள் கட்டவில்லை. அந்த பத்திரிகையில் கூட என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. அச்சிடப்பட்ட பத்திரிக்கையில் என் பெயர் எங்கும் இடம் பெறவில்லை.
ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என்னை கட்சியிலிருந்து நீக்குகிறார்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற திருமண விழாவில் அவரை நான் புகழ்ந்து பேசியதாக நினைத்து, இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.. நான் அப்படி எதுவுமே அண்ணாமலையை புகழ்ந்து பேசவில்லை. "அண்ணாமலை என்றாலே தமிழ்நாட்டில் அனைவருக்கும் கிலி பிடிக்கிறது, புளி கரைக்கிறது" என்றேன்... இவர்களுக்கு ஏன் அந்த பயம் வந்தது? என்றுதான் தெரியவில்லை.
ராஜினாமா: என்னை ராஜினாமா செய்ய சொல்லி யாருமே நிர்பந்திக்கவில்லை. பாஜகவில் இணைவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எனக்கு அளிக்கப்பட்ட பதவி அனைத்தும் முன்னாள் முதல்வர் அம்மாவால் எனக்கு வழங்கப்பட்டன.
ஆக, திமுகவில் இணையும் இல்லை என்று தெரிவித்துவிட்ட முரளி, பாஜகவில் இணைவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளால், விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக - அதிமுக இப்போதுவரை கூட்டணியில்தான் உள்ள நிலையில், முரளி விவகாரம் பல சந்தேகங்களை கிளப்பிவிட்டுள்ளது. அறக்கட்டளை சார்பில் கலந்து கொண்டதாக அவர் விளக்கம் தந்தாலும்கூட, சொந்த கூட்டணியை சேர்ந்த பாஜக தலைவர் விழா என்பதால் முரளி பங்கேற்றிருக்கலாம் என்கிறார்கள்.. இத்தனைக்கும் "அதிமுக - பாஜக கூட்டணி உறவு தொடரும்" என்று கடந்த மாதம்தான் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் சொல்லியிருந்தார். இப்போது என்ன ஆனது என்று தெரியவில்லை.
உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நேரில் சந்தித்து பேசியபோது, இனி இணக்கமாக இணைந்து செயல்படுவோம் என்றுதான்அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாடிமியும் உறுதி தந்ததாக சொல்லப்பட்டது. எனினும் இந்த 2 மாத காலமாகவே இரு கட்சி தலைவர்களுமே நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை, ஒருவரைபற்றி ஒருவர் விமர்சித்து கொள்ளவுமில்லை.. இதேசமயம், கூட்டணி இல்லை என்றும் சொல்லவில்லை.
நேற்று முன்தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசியபோது, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசப்படும் என்று சொன்னதுடன், பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்.. ஒருவேளை, பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் அதிமுகவின் பழைய சிறுபான்மையினர் வாக்கு வங்கி மறுபடியும் கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதாக தெரிகிறது.
விரிசல்: இதற்காகவே, பாஜகவுடனான இடைவெளியை, எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிகப்படுத்துவதாகவும் சொல்கிறார்கள்.. பாஜகவுக்கு எதிரான ஒரு பிம்பத்தை வெளிப்படுத்தும் நோக்கில், முரளி விவகாரத்தையும் கையாண்டிருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்..
எனினும் கட்சியின் சீனியரை, திடீரென நீக்கம் செய்துள்ளது, விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல், அதிமுகவுக்கே சறுக்கலாகிவிடும் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. கூட்டணி கட்சிகளுக்குள் உண்மையிலேயே என்ன பிரச்சனை? என்று தெரியவில்லை என்றாலும், அதிமுக - பாஜக விரிசல் மேலும் அதிகரித்துள்ளது என்பதற்கு, 'முரளியின் நீக்கம் ஒரு சாட்சி' என்கிறார்கள்..!!
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications